செபீல்டு (Sheffield, /ˈʃɛfld/ (கேட்க) ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தின் வடபகுதியில் தெற்கு யார்க்சையரில் உள்ள ஓர் நகரமாகும். இங்கு பாயும் ஷீஃப் ஆற்றினைக் கொண்டு இந்நகர் இப்பெயர் பெற்றது. தொழிற்சாலைகளினாலேயே இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. செபீல்டு நகரத்தின் 2011 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 551,800 ஆகும். இங்கிலாந்தின் எட்டு மிகப்பெரும் நகரங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் செபீல்டு நகரம், நிறுவப்பட்டது ...
செபீல்டு நகரம்
Thumb
கடிகாரச்சுற்றில் மேல் இடதிலிருந்து: செபீல்டு பல்கலைக்கழகம் கட்டிடம்; அருண்டேல் வாயிலிலிருந்து செயின்ட் பால் கட்டிடம்; செபீல்டின் சக்கரமும் செபீல்டு நகர மன்றமும்; மீடோஹால் அங்காடிக்கூடம்; செபீல்டு நிலையமும் ஷீஃப் சதுரம்.
Thumb
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்
அடைபெயர்(கள்): "எஃகு நகரம்"
குறிக்கோளுரை: "Deo Adjuvante Labor Proficit"
"கடவுளருளால் நம் முயற்சி வெல்லும்"
Thumb
இங்கிலாந்தினுள் செபீல்டு அமைவிடம்
நிறுவப்பட்டது~8வது நூற்றாண்டு
ஊர் அரசியலமைப்பு10 ஆகத்து 1297
நகரமாகத் தகுதி1893
பரப்பளவு
  நகரம்367.94 km2 (142.06 sq mi)
மக்கள்தொகை
  நகரம்வார்ப்புரு:English district population ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:English district rank]])
  நகர்ப்புறம்
6,40,720
(செபீல்டு ஊரகப் பகுதி)
  நகர்ப்புற அடர்த்தி3,949.2/km2 (10,228/sq mi)
  செரெமோனியல் கௌன்ட்டி
12,92,900
நேர வலயம்ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்)
இடக் குறியீடு0114
இணையதளம்www.sheffield.gov.uk
மூடு

19வது நூற்றாண்டில் செபீல்டு எஃகு உற்பத்தியால் உலகெங்கும் பெயர் பெற்றிருந்தது. எஃகு தயாரிப்பில் பல மேம்பாடுகள் இங்கு ஏற்பட்டன. தொழிற் புரட்சியின்போது இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து மடங்காகப் பெருகியது. 1843 இல் நகராட்சி அங்கீகாரம் பெற்றது. 1970களிலும் 198களிலும் பன்னாட்டு போட்டித் தயாரிப்புக்களாலும் நிலக்கரி சுரங்கத் தொழில் முடக்கத்தாலும் உள்ளூர் இரும்புத் தயாரிப்பு முடங்கத் தொடங்கியது.

21வது நூற்றாண்டில் மற்ற பிரித்தானிய நகரங்களைப் போலவே இங்கும் விரிவான ஊரகப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. £9.2 பில்லியன் உற்பத்தியுடன் பொருளியலில் மொத்த மதிப்புக் கூட்டல் 1997இல் 60%ஆக உயர்ந்துள்ளது.[1]

பல மலைகளின் நடுவே அமைந்துள்ள செபீல்டு பீக் தேசியப் பூங்காவிற்கு கிழக்கில் உள்ளது. டான் ஆறு மற்றும் அதன் துணையாறுகளுடன் செபீல்டு 61% பசும்வெளியாக உள்ளது.[2] இந்நகரில் 200க்கும் கூடுதலான பூங்காக்களும் வனப்பகுதிகளும் நந்தவனங்களும் உள்ளன.[3] 2.5 மில்லியன் மரங்கள் உள்ளதாக மதிப்பிடப்படும் செபீல்டு, ஐரோப்பாவின் எந்த நகரத்திலும் உள்ள தனிநபர் ஒருவருக்கெதிர் மரங்களின் எண்ணிக்கையில் உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது.[2]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.