சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கேசவர் கோவில் அல்லது சென்னகேசவர் கோயில் என்பது இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் உள்ள சோமநாதபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு ஒரு பழமையான வைணவக் கோயில் ஆகும். சோம்நாத்புரம் மைசூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது (பெங்களூரில் இருந்து தென்மேற்காக 140 கி.மீ தொலைவில் உள்ளது). இதுவே போசளர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். இது போசளர் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகும். இக் கோயில், போசள மன்னன் மூன்றாம் நரசிம்மனின் கீழ் தண்டநாயகனாக இருந்த சோமநாதன் என்பவனால் பொ.ஊ. 1268 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஓய்சாளர் கட்டிடக்கலையால் ஆன கோவில்களுள் இதுவே நன்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான கோயில் இது ஆகும். அக்காலம் ஹோய்சாலப் பேரரசு தென்னிந்தியாவில் வலுவான நிலையில் இருந்த காலம் ஆகும். இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் போசாளர்கள் 260 ஆண்டுகளாக கருநாடகத்தில் ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றார்கள்.
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம் | |
---|---|
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம் | |
ஆள்கூறுகள்: | 12°16′33″N 76°52′54″E |
பெயர் | |
கருநாட -ஆங்கிலம்: | ಶ್ರೀ ಚೆನ್ನಕೇಶವ ದೇವಸ್ಥಾನ -Chennakesava Temple, Somanathapura |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | மைசூர் |
அமைவு: | சோமநாதபுரம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | போசளர் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1268 |
பெரிய மதிலால் சூழப்பட்ட இக் கோயிலின் நுழைவாயிலில், உயரமான தூண்களைக் கொண்ட ஒரு நுழைவு மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடம் மாவுக் கற்களால் அமைக்கப்பட்டது. இதன் சமச்சீரான கட்டிட அமைப்பு, ஒரே அளவு முதன்மை கொண்ட கருவறைகளில் அமைந்துள்ள சிற்பங்கள் போன்ற இயல்புகளால் இக்கோயில் பிற ஹோய்சாலக் கோயில்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குகிறது. இதை விடச் சிறப்பான சிற்பங்களையும், சிறப்பான கட்டிடக்கலையையும் கொண்ட பல ஹோய்சாலக் கோயில்கள் இருந்தாலும், இக் கோயில் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது.
ஒரு மேடை மீது அமைந்துள்ள இக் கோயில் ஒன்றுபோலவே அமைந்த மூன்று சிறு கோயில்களையும் அவற்றில் மீதமைந்த மூன்று விமானங்களையும் கொண்டது. உள்ளே மேற்படி சிறு கோயில்கள் ஒவ்வொன்றும், சுகநாசி எனப்படும் சிறிய மண்டபங்களினூடாகப் பெரிய மண்டபம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறு மண்டபங்களும் அவற்றுக்கெனத் தனியான விமானம் போன்ற மேற்கட்டிட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இச்சிறு கோயில்களின் புறச்சுவர்கள், விமானங்கள், சுகநாசிகள் அனைத்துமே மிகச் சிறப்பாக அழகூட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக ஒரு சமநிலையான வடிவமைப்பை வழங்குகின்றன. இக்கோயிலின் மையப்பகுதியாக உள்ளது முன் குறித்த பெரிய மண்டபம் ஆகும். சிறு கோயில்கள் மூன்றும் இம் மண்டபத்தின் பிற்பகுதியில் ஒன்றும் இரண்டு பக்கங்களில் ஒவ்வொன்றுமாக அமைந்துள்ளன. மேடை கோயில் கட்டிடத்தின் தள அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் தூண் வரிசைகளோடு கூடிய சுற்று மண்டபங்களும் உள்ளன. கோயில் கட்டிடங்களின் புறச் சுவர்களுக்கு வெளியேயும் நீண்டிருக்கும் மேடை, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையுமுன் அதனைச் சுற்றி வருவதற்கான இடவசதியை வழங்குகிறது.
மூன்று சிறு கோயில்களின் கீழ்ப் பகுதிகளும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது.
இக்கோயிலில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வழக்கத்தில் இருந்து சற்று வேறானது. சிற்பிகளில் புகழ்மிக்க மல்லித்தம்மாவும் குறிப்பிடப்படுகின்றார். கோயிலில் புறச்சுவரில் உள்ள 194 சிற்பங்களில் 40 சிற்பங்களை மல்லித்தம்மா செதுக்கியதாக குறிப்பிடப்பட்டுளன. மற்ற சிற்பிகளாகிய பல்லையா, சௌடைய்யா, பார்மய்யா,காமய்யா, நஞ்சய்யா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.