சுமாத்திரா காண்டாமிருகம்
ஒரு பாலூட்டி இனம் From Wikipedia, the free encyclopedia
சுமாத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros) ஆசிய இரண்டு கொம்பு காண்டாமிருகம் மற்றும் மயிரடர்ந்த காண்டாமிருகம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. ரெய்னோசெரடியி குடும்பத்திலேய மிகவும் அரிதான உறுப்பினர் எனலாம்(தற்போது கடுமையான ஆபத்தான அழியும் நிலையில் உள்ள விலங்கு). தற்போது நடைமுறையில் டைசோரனஸ் பேரினத்தில் உள்ள ஒரே உயிரினம் இவ்விலங்கே ஆகும்.[5][6]
சுமாத்திரா காண்டாமிருகம் | |
---|---|
இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தில் உள்ள காண்டாமிருக சரணாலயத்தில் இருக்கும் ஒரு சுமத்திரா காண்டாமிருகம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Dicerorhinus Gloger, 1841 |
இருசொற் பெயரீடு | |
Dicerorhinus sumatrensis | |
மாதிரி இனம் | |
sumatrensis Fischer, 1814)[4] | |
துணையினம் | |
|
சுமாத்திரா காண்டாமிருகமே இவ்வுலகில் மிகச்சிறிய காண்டாமிருகம் ஆகும். இதன் பாதம் முதல் தோள் வரையிலுள்ள உயரம் மட்டுமே 112செ.மீ முதல் 145செ.மீ ஆகும். இவ்விலங்கின் தலை மற்றும் உடம்பின் நீளம் 2.36மீ-3.18மீ மற்றும் வாலின் நீளம் 35-70செ.மீ ஆகும். சுமாத்திராகாண்டாமிருகத்தின் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட அதிக எடை 500கிலோ முதல் 1000கிலோ வரை. இவ்விலங்கின் மேற்மயிர் படலமானது சிவப்பு மற்றும் பழுப்பு நிறக்கலவையில் இருக்கும். இதன் கொம்புகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் காண்டாமிருகங்களுக்கு பெண் காண்டாமிருங்களை விட நீண்ட கொம்புகள் இருக்கும். சுமாத்திரா காண்டாமிருகங்கள் அடர்ந்த இரண்டு தோல் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இம்மிருகங்களின் கழுத்துப் பகுதியில் மட்டும் சிறிய மற்றும் அடர்த்திக் குறைவான தோல் மடிப்பைக் கொண்டுள்ளது. இதன் தோல் மட்டும் 10மி.மீ -16மி.மீ அடர்த்தியானது. காடுகளில் வாழும் விலங்குகளுக்கு மட்டும் தோலிலடியிலான கொழுப்பு இருக்காது. இவற்றின் முடி மிருகத்திற்கு மிருகம் வேறுபடும். மற்றும் ஒரு துண்டு போன்ற நீளமான முடி அமைப்பு இதன் காதுகளின் மேல் உள்ளது. அனைத்து காண்டாமிருகங்களைப் போலவே இவற்றிற்கும் கண்பார்வை மிகவும் குறைவு. இவற்றால் சரிவாக உள்ள பகுதிகளில் சுலபமாக நடக்க முடியும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.