சிவப்பு மான்
ஒரு பாலூட்டி இனம் / From Wikipedia, the free encyclopedia
Euteleostomi
சிவப்பு மான் | |
---|---|
முதிர்ந்த ஆண் மான் | |
பெண் மான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. elaphus |
இருசொற் பெயரீடு | |
Cervus elaphus லின்னேயஸ், 1758 | |
துணையினங்கள் | |
| |
சிவப்பு மான் பரவல் திரும்ப அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள் அண்மைய வாழ்விடங்கள் |
சிவப்பு மான் (Cervus elaphus) எனப்படுவது ஒரு பெரிய மான் வகையாகும். இது ஐரோப்பா, காக்கசஸ் மலைப்பகுதிகள், அனத்தோலியா, ஈரான் ஆகிய பகுதிகள் முழுவதும், மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை வடமேற்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோவிற்கும், துனீசியாவிற்கும் இடைப்பட்ட அட்லஸ் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரே மான் வகை இவையே ஆகும்.[2] இவை ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, பெரு, உருகுவே, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.[3][4] உலகின் பல பகுதிகளில் இவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு மான்கள் அசைபோடும் விலங்குகள் ஆகும். இவற்றின் வயிறு நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. மரபணு ஆராய்ச்சியின் படி சிவப்பு மானானது ஒரு இனமாக அல்லாமல் இனக்குழுவாக வகைப்படுத்தப்படுகிறது. இருந்தும் எத்தனை இனங்கள் இந்தக் குழுவில் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.[5][6] வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கிழக்குப் பகுதிகளை பூர்வீகமாக உடைய இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றும் சற்றே பெரிய அமெரிக்க எல்க் அல்லது வபிட்டியானது சிவப்பு மானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அது தனி இனமாக கருதப்படுகிறது. வபிட்டி உட்பட அனைத்து சிவப்பு மான்களின் மூதாதையர் ஆனது மத்திய ஆசியாவில் தோன்றி இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அது சிகா மானை ஒத்து இருந்திருக்க வேண்டும்.[7]
ஒரு நேரத்தில் சிவப்பு மானானது ஐரோப்பிய பகுதிகளில் அரிதாக இருந்த போதிலும் அவை அழியும் தருவாயில் இருந்தது இல்லை. ஐக்கிய இராச்சியம் மற்றும் போர்ச்சுகல்[8] ஆகிய நாடுகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுதல் மற்றும் பாதுகாக்கும் முயற்சிகள் ஆகியவற்றால் சிவப்பு மான்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் வட ஆப்பிரிக்கா போன்ற மற்ற பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.