சிரிய பாலைவனம்
சிரிய பாலைவனம் / From Wikipedia, the free encyclopedia
சிரிய பாலைவனமானது (அரபு மொழி: بادية الشام, Bâdiyat aş-Şâm), அமத் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இது ஸ்டெப்பி புல்வெளிகள் மற்றும் பாலைவனம் ஆகியவை இணைந்த நிலப்பகுதியாகும். இது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு சிரியா, வடகிழக்கு ஜோர்தான், வடக்கு சவூதி அரேபியா மற்றும் மேற்கு ஈராக்கு ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கி 500000 சதுர கிலோமீட்டர்கள் அல்லது 200000 சதுர மைல்கள் அளவிற்குப் பரவியுள்ளது. இதனுடைய தெற்கத்திய எல்லைகள் அரேபியன் பாலைவனத்துடன் இணைகின்ற விதத்தில் உள்ளது.[2] இந்த நிலப்பகுதியானது திறந்த, வறட்சியான பாலைவனப்பகுதியாகவும், அவ்வப்போது காணப்படுகின்ற வறண்ட ஆற்றுப்படுகைகளைக் கொண்டதாகவும் உள்ளது.[3]