சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமை பெற்றது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேசியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள்ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது. சிகாகோவின் பரவலாக அறியப்படும் சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.[1]

Thumb
சிகாகோ நதியிலிருந்து காணக்கூடிய சியேர்ஸ் கோபுரத்தின் தோற்றம்

இக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது.

காற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும்.

இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை.

இவற்றையும் பார்க்கவும்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.