சியார்ச் வாசிங்டன்
1789 முதல் 1797 வரை இருந்த முதல் அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799)[1] அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.[2]
விரைவான உண்மைகள் சியார்ச் வாசிங்டன், முதல் குடியரசுத் தலைவர் ...
சியார்ச் வாசிங்டன் | |
---|---|
முதல் குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 30 1789 – மார்ச் 4 1797 | |
முன்னையவர் | (யாரும் இல்லை) |
பின்னவர் | சான் ஆடம்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 22 1732 வெசிட்மோர்லாண்டு கவுண்ட்டி, வர்ச்சீனியா |
இறப்பு | டிசம்பர் 14 1799, அகவை 67 வெர்னான் மலை, வர்ச்சீனியா |
தேசியம் | அமெரிக்கர் |
துணைவர் | மார்த்தா வாசிங்டன் |
கையெழுத்து | |
மூடு