சிங்கம்
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய பூனை / From Wikipedia, the free encyclopedia
சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.
விரைவான உண்மைகள் சிங்கம், காப்பு நிலை ...
சிங்கம் | |
---|---|
அரிமா (ஆண் சிங்கம்) | |
பெண் சிங்கம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உறுமும் பூனைகள் |
இனம்: | பா. லியோ |
இருசொற் பெயரீடு | |
பாந்த்தரா லியோ (லின்னேயசு, 1758) | |
ஆப்பிரிக்காவில் சிங்கங்களின் பரவல் | |
வேறு பெயர்கள் | |
(லின்னேயசு, 1758) |
மூடு