From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூரில் பௌத்தம் என்பதானது சிங்கப்பூரில் அதிகமானாரோல் கடைபிடிக்கப்படுகின்ற மதமான பௌத்தமாகும். 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 31.1 விழுக்காட்டு மக்கள் தொகையினர் பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். [1] 2015இல், 3,276,190 சிங்கப்பூர்க்காரர்களில் 33.21 விழுக்காட்டினரான 1,087,995 பேர் பௌத்தர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். [2]
சிங்கப்பூரில் பௌத்தம், இசுலாம், கிறித்துவம், இந்து, சீக்கியம், டாவோ, கன்பூசியன் ஆகிய மதங்கள் உள்ளன. [3] 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சமயம் சாராதவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். 15 வயதிற்கும், அதற்கும் அதிக வயதுள்ளவர்களில் 31.1% பௌத்தர்கள் என்று தங்களைச் கூறிகொண்டனர். பிற பிரிவுகள் என்ற நிலையில் 8.8% தாவோயிஸ்டுகள்; 18.9% கிறிஸ்துவர்கள்; 15.6% முஸ்லிம்கள்; 5% இந்துக்கள் உள்ளனர். [4]
பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயானமே சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தேரவாத பௌத்தத்திற்கு அங்கீகாரம் உண்டு. சீனர்கள் பரவியுள்ள சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பௌத்தம் ஆளுமை பெற்று விளங்குகின்றது. [5] சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திபெத்திய பௌத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.[6]
1948இல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் பௌத்த பெடரேசன் என்ற அமைப்பானது சிங்கப்பூரில் உள்ள பௌத்தர்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்றிணைக்கிறது. [7] மேலும் பௌத்தம் தொடர்பான விழா நிகழ்வுகளை நடத்துகிறது. [8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.