From Wikipedia, the free encyclopedia
சால்வா ஜுடும் (Salwa Judum) என்பதற்கு கோண்டி மொழியில் அமைதிப் பேரணி என்றும்; புனித வேட்டை என்று பொருள் ஆகும். இந்தியாவின் சிவப்பு தாழ்வாரம் பகுதியில் அமைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் சால்வா ஜுடும் இயக்கத்தின் தலைவராக, உள்ளூர் கோண்டு பழங்குடி மக்களைச் சேர்ந்த மகேந்திர கர்மா என்பவர் 2005-ஆண்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போராளிகளிடமிருந்து உள்ளூர் கோண்டு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும்; போராளிகளை விரட்டியடிக்கவும், சத்தீஸ்கர் மாநில காவல் துறை தேவையான தற்காப்பு மற்றும் ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் போராளிகளுக்கு எதிராக போரிட துப்பாக்கி போன்ற ஆயுங்களையும் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு வழங்கியது.[1][2]
6 சூலை 2011-இல் இந்திய உச்ச நீதிமன்றம் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளுக்கு எதிரான சால்வா ஜுடும் இயக்கம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. எனவே சத்தீஸ்கர் அரசு சால்வா ஜுடும் இயக்கத்தை கலைத்ததுடன், சத்தீஸ்கர் மாநில காவல் துறை பழங்குடி மக்களுக்கு வழங்கிய துப்பாக்கி போன்ற ஆயுதங்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.[3]
25 மே 2013 அன்று சால்வா ஜுடும் இயக்கத்தின் தலைவர் மகேந்திர கர்மா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ராய்ப்பூர் மற்றும் ஜெகதல்பூர் நகரத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்பா சமவெளியில் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.