இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சாந்தனு தாக்கூர் (Shantanu Thakur)(பிறப்பு 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு முதல் பாங்கான் மக்களவை உறுப்பினராக உள்ளார்.[3][4][5] தாக்கூர் 7 சூலை 2021 அன்று மோதியின் அமைச்சரவை மறுசீரமைப்பிற்குப் பிறகு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சாந்தனு தாக்கூர் | |
---|---|
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | சர்பானந்த சோனாவால் |
முன்னையவர் | மன்சுக் எல். மாண்டவியா |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | மம்தா தாக்கூர் |
தொகுதி | பாங்கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஆகத்து 1982 தாக்கூர் நகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | பாஜக |
துணைவர் | சோமா தாக்கூர் (தி. 2011) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம்(s) | தாக்கூர் நகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், 743287 |
முன்னாள் கல்லூரி | விக்டோரியா பல்கலைக்கழகம், கருநாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி, தர்மகர்த்தா-மாத்துவ மகாசங்கம் |
As of 17 ஆகத்து 2019 மூலம்: |
2019 பொதுத் தேர்தலில், தாக்கூர் பாஜகவின் வேட்பாளராக, பாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பாஜக உறுப்பினர் இவராவார். இவர் வங்காள முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூரின் மகன் ஆவார். இவர் அனைத்திந்திய மாத்துவ மகாசங்கத்தின் தலைவர் ஆவார்.[7][8][9][10]
சூலை 7, 2021 அன்று நரேந்திர மோதியின் இரண்டாவது அமைச்சரவையின், அமைச்சரவை மாற்றத்தின் போது, இவருக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.