From Wikipedia, the free encyclopedia
சல்பேட்டு (Sulfate அல்லது Sulphate) அயனி என்பது SO42- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பல்லணு எதிர்மின் அயனியாகும் [1] பன்னாட்டுத் தனி, பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் இதற்குப் பரிந்துரைக்கப்படும் பெயர் Sulfate ஆக இருப்பினும், பிரித்தானிய ஆங்கிலத்தில் இதன் பெயர் Sulphate என எழுதப்படுகின்றது.[2]. உப்புகள், அமில வழிப்பொருள்கள், சல்பேட்டுகளின் பெராக்சைடுகள் போன்றவை தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தினசரி வாழ்க்கையிலும் சல்பேட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கந்தக அமிலத்தின் உப்புகளான சல்பேட்டுகள் அதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
சல்பேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
14808-79-8 | |||
ChEBI | CHEBI:16189 | ||
ChemSpider | 1085 | ||
EC number | 233-334-2 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 1117 | ||
| |||
பண்புகள் | |||
SO2− 4 | |||
வாய்ப்பாட்டு எடை | 96.06 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஒரு மைய கந்தக அணு நான்கு சமமான ஆக்சிசன் அணுக்களால் சூழப்பட்டு ஒரு நான்முகி ஒழுங்கமைப்பாக சல்பேட்டு எதிர்மின் அயனி உருவாகியுள்ளது [3].மீத்தேன் வாயுவில் உள்ள அதே சீர்மை சல்பேட்டிலும் காணப்படுகிறது. கந்தக அணு இங்கு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது [4]. நான்கு ஆக்சிசன் அணுக்களும் -2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகின்றன [4].எனவே சல்பேட்டு அயனியின் ஒட்டு மொத்த ஆக்சிசனேற்ற நிலை -2 ஆகும் [5]. பைசல்பேட்டு (HSO−4) அயனிக்கு இதுவே இணை காரமாகும். பைசல்பேட்டு அயனி கந்தக அமிலத்திற்கு இணை காரமாகும். டைமெத்தில் சல்பேட்டு போன்ற கரிம சல்பேட்டு எசுத்தர்கள் சகப்பிணைப்பு சேர்மங்கள் ஆகும். இவை கந்தக அமிலத்தின் எசுத்தர்களாக அரியப்படுகின்றன. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை சல்பேட்டு அயனியின் நான்முக மூலக்கூற்று வடிவியலை முன்கணித்தது [6].நவீன முறை பிணைப்பின் முதல் விளக்கம் கில்பெர்ட் லூயிசு என்பவரால் 1916 ஆம் ஆண்டின் அவரது தலைசிறந்த பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டது, ஒவ்வோர் அணுவையும் சுழ்ந்துள்ள எலக்ட்ரான் எண்மங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இவர் சல்பேட்டின் பிணைப்பை விவரித்தார்.
உலோகம், உலோக ஐதராக்சைடு அல்லது உலோக ஆக்சைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்ப்பதால் உலோக சல்பேட்டுகள் உருவாகின்றன.[7]
பல அயனிச் சல்பேட்டுகள் அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் தண்ணீரில் நன்றாக கரைகின்றன. கால்சியம் சல்பேட்டு, இசுட்ரோன்சியம் சல்பேட்டு, ஈய(II) சல்பேட்டு, பேரியம் சல்பேட்டு போன்றவை விதிவிலக்குகளாகும். இவை நீரில் கரைவதில்லை. ரேடியம் சல்பேட்டு முற்றிலும் கரையாத சல்பேட்டாக அறியப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பேரியம் வழிப்பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன. சல்பேட்டு அயனிகள் உள்ள கரைசலில் பேரியம் குளோரைடு கரைசலைச் சேர்த்தால் வெண்மை நிற வீழ்படிவு உருவாகும். இது சல்பேட்டுகளை கண்டறிய உதவும் ஓர் ஆய்வாகும்.
சல்பேட்டு அயனி ஓர் ஈனியாக செயல்படுகிறது. ஓர் ஆக்சிசன் அல்லது இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் ஒரு பாலமாக அல்லது ஓர் இடுக்கிப் பிணைப்பாக இது இணைகிறது. [Co(en)2(SO4)]+Br−[7] அல்லது நடுநிலை அணைவுச் சேர்மம் PtSO4(P(C6H5)3)2 போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இங்கு சல்பேட்டு அயனி இருபல் ஈந்தணைவியாக செயல்படுகிறது. சல்பேட்டு அணைவுச் சேர்மங்களில் உள்ள உலோக ஆக்சிசன் பிணைப்புகள் சகப்பிணைப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
மூலக்கூற்று வாய்பாடு | பெயர் |
---|---|
SO2− 5 | பெராக்சோமோனோசல்பேட்டு |
SO2− 3 | சல்பைட்டு |
S 2O2− 8 | பெராக்சிடைசல்பேட்டு |
S 2O2− 7 | பைரோசல்பேட்டு |
S 2O2− 6 | டைதயோனேட்டு |
S 2O2− 5 | மெட்டாபைசல்பைட்டு |
S 2O2− 4 | டைதயோனைட்டு |
S 2O2− 3 | தயோசல்பேட்டு |
S 4O2− 6 | டெட்ராதயோனேட்டு |
சல்பேட்டுகள் தொழிசாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Sulfates are widely used industrially. Major compounds include:
ஈய(II) சல்பேட்டு: ஈய அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
சில சல்பேட்டுகள் இரசவாதிகளால் அறியப்பட்டிருந்தன. கண்ணாடி போன்ற என்ற பொருள் கொண்ட விட்ரொலினியம் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்ட விட்ரியோல் உப்புக்கள் ஒளிபுகும் படிகங்களாக இருந்தன. இரும்பு(II) சல்பேட் எப்டா ஐதரேட்டு , FeSO4 • 7H2O; கிரீன் விட்ரியால் எனப்பட்டது. செம்பு(II) சல்பேட்டு பெண்டா ஐதரேட்டு CuSO4•5H2O நீல விட்ரியால் எனப்பட்டது. துத்தநாக சல்பேட்டு எப்டா ஐதரேட்டு வெண் விட்ரியால் ZnSO4•7H2O.என்று அழைக்கப்பட்டது. படிகாரம் என்பது பொட்டாசியம் மற்றும் அலும்னியம் சல்பேட்டின் இரட்டை உப்பாகும்.
புதைபடிவ எரிபொருள் மற்றும் உயிரினத் தொகுதிகள் எரிவதன் விளைவாக சல்பேட்டுகள் நுண்ணிய துகள்களாக உருவாகின்றன. அவை வளிமண்டலத்தின் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன மற்றும் அமில மழையை உருவாக்குகின்றன.காற்றில்லா சல்பேட்-பாக்டீரியாக்கள் கருப்பு சல்பேட் மேலோட்டத்தை அகற்றி பெரும்பாலான கட்டிடங்களை கெடுத்துவிடுகின்றன. காலநிலை மாற்றத்திலும் சல்பேட்டுகள் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. சல்பேட்டுகளால் நிகழும் ஒளி சிதறல் பூமியின் எதிரொளிக்கும் திறனை திறம்பட அதிகரிக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.