![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Coat_of_arms_of_Sarawak.svg/langta-640px-Coat_of_arms_of_Sarawak.svg.png&w=640&q=50)
சரவாக் பிரதமர்
சரவாக் மாநிலத்தின் அரசாங்கத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
சரவாக் பிரதமர் (மலாய்: Premier Sarawak; ஆங்கிலம்: Premier of Sarawak; சீனம்: 砂拉越州长) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரைக் குறிப்பதாகும். யாங் டி பெர்துவா சரவாக் என்று அழைக்கப்படும் மாநில ஆளுநரால் சரவாக் பிரதமர் நியமிக்கப் படுகிறார்.
Sarawak சரவாக் பிரதமர் Premier Sarawak Premier of Sarawak | |
---|---|
![]() சரவாக் மாநிலச் சின்னம் | |
![]() சரவாக் மாநிலக் கொடி | |
சரவாக் அரசாங்கம் | |
பதவி | அரசாங்க நிர்வாகத் தலைவர் |
உறுப்பினர் | சரவாக் அமைச்சரவை |
அறிக்கைகள் | சரவாக் மாநில சட்டமன்றம் |
அலுவலகம் | மலேசியத் தந்தையார் வளாகம் Wisma Bapa Malaysia, Petra Jaya, Kuching |
நியமிப்பவர் | துன் பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் மகமுட் (Abdul Taib Mahmud) யாங் டி பெர்துவா சரவாக் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
அரசமைப்புக் கருவி | Constitution of the State of Sarawak |
முதலாவதாக பதவியேற்றவர் | காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) (முதலமைச்சர்) |
உருவாக்கம் | 22 சூலை 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-07-22) மந்திரி பெசார் (Chief Minister) 1 மார்ச்சு 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-03-01) |
துணை சரவாக் பிரதமர் Premier Sarawak Premier of Sarawak | சரவாக் துணைப் பிரதமர் (Deputy Premier of Sarawak) |
இணையதளம் | premier.sarawak.gov.my |
சரவாக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசியல் கட்சி அல்லது ஓர் அரசியல் கூட்டணியின் தலைவராகவும் சரவாக் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார்.[1]
சரவாக் பிரதமர் எனும் இந்தப் புதிய பதவிக்கு முன்பு சரவாக் முதல்வர் என்று அந்தப் பதவி அழைக்கப்பட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சரவாக் முதல்வர் எனும் பதவி; "பிரதமர்" பதவி என்று மறுபெயரிடப் பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு 2022 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]
சரவாக் மாநிலத்தின் தற்போதைய பிரதமர் அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Abdul Rahman Johari Abang Openg) ஆவார். இவர் 2017 சனவரி 13-ஆம் தேதி சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராக (மந்திரி பெசார்) பதவியேற்றார். தற்சமயம் சரவாக் பிரதமர் என்று அழைக்கப் படுகிறார்.[3][4]