கோவிட்-19
From Wikipedia, the free encyclopedia
"கோவிட்" redirects here. பெருந்தொற்று பற்றி அறிய பார்க்க கோவிட்-19 பெருந்தொற்று. பிற கொரோனா வைரசினால் ஏற்படும் நோய்கள் பார்க்க கொரோனா வைரஸ் நோய்கள்.
கொரோனா வைரஸ் நோய் 2019 (Coronavirus disease 2019) (சுருக்கமாக கோவிட்-19 (COVID-19) என்பது கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2) மூலம் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். முதன் முதலில் இது சீனாவின் ஊகான் பகுதியில் திசம்பர் 2019 இல் கண்டறியப்பட்டது.[2] இந்நோய் உலகளவில் பரவி கோவிட்-19 பெருந்தொற்று என மாறியது.[3]