கோத்தா இசுகந்தர்
இசுகந்தர் புத்திரி நிர்வாக மையம் / From Wikipedia, the free encyclopedia
கோத்தா இசுகந்தர் (ஆங்கிலம்: Kota Iskandar அல்லது Johor State New Administrative Centre (JSNAC); மலாய்: Kota Iskandar; ஜாவி: كوتا إسكندر) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நிர்வாக மையம் ஆகும்.
விரைவான உண்மைகள் கோத்தா இசுகந்தர், நாடு ...
கோத்தா இசுகந்தர் | |
---|---|
Kota Iskandar | |
கோத்தா இசுகந்தர் நுழைவாயில் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°25′21.7″N 103°39′06.3″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
அமைவிடம் | இசுகந்தர் புத்திரி |
உருவாக்குநர் | சகயா சவுகார் Cahaya Jauhar |
உருவாக்கம் | 19 ஏப்ரல் 2009 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
இணையதளம் | www.kotaiskandar.com |
மூடு
ஜொகூர் மாநில சட்டமன்றம் இந்த நிர்வாக மையத்தில் இருந்து செயல்படுகிறது. இது இசுகந்தர் புத்திரி திட்டத்தின் (Iskandar Puteri Project) முதல் கட்டமாகும். இசுகந்தர் புத்திரி திட்டம் என்பது இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இசுகந்தர் புத்திரி திட்டத்தைச் சகயா சவுகார் (Cahaya Jauhar) எனும் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.[1]