கோடம்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கோடம்பாக்கம் சென்னையின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். முக்கிய குறியீட்டு நிறுவனங்களாக மீனாட்சி சுந்தரராசன் மகளிர் கலைக்கல்லூரியும், இருபாலரும் சேர்ந்து பயிலும் பொறியியற் கல்லூரியும் அமைந்துள்ளன. விதவிதமான ஆடைகளை விற்பனை செய்யும் சேகர் எம்போரியம் இப்பகுதியில் மிகப் பிரபலமாகக் கருதப்படும். இப்பகுதியிலேயே நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் கட்டப்பெற்று பராமரித்து வரும் கல்யாணமண்டம் பிரபலமானது. லிபர்ட்டி சினிமா தியேட்டரும் இங்குதான் இருந்தது. அந்த இடத்தில் தற்சமயம் லிபர்ட்டி பார்க் என்ற ஹோட்டலும், பாரத வங்கியும் செயல்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திரையுலகைத்தான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்.[4] தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ. வி. எம். போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோடம்பாக்கத்தின் அருகில் அமைந்துள்ளன.
கோடம்பாக்கம் கோடம்பாக்கம், சென்னை | |
கோடம்பாக்கத்தில் உள்ள இரயில்வே மேம்பாலம் | |
அமைவிடம் | 13°02′53″N 80°13′17″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] |
திட்டமிடல் முகமை | சி.எம்.டி.ஏ. |
Civic agency | சென்னை மாநகராட்சி |
Ward | வார்ட் நம்பர் 130 (கோடம்பாக்கம் மேற்கு) & வார்டு நம்பர் 131 (கோடம்பாக்கம் தெற்கு) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |