From Wikipedia, the free encyclopedia
கொலம்பியா (Columbia) அல்லது நுனா (Nuna) அல்லது ஹட்சன்லாந்து (Hudsonland) புவியின் பண்டைக்கால மீப்பெருங்கண்டங்களில் ஒன்றாகும். இக்கருத்துருவை முதன்முதலில் ஜே.ஜே.டபிள்யூ. ரோஜர்சும் எம். சந்தோசும் (2002) முன்மொழிந்தனர்[1] இப்பெருங்கண்டம் ஏறத்தாழ 2.5 முதல் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தொல்லுயிர்களுக்கு முன்னாடி காலத்தில் இருந்ததாக கருதப்படுகின்றது. சாவ் மற்றும் பிறர் (2002)[2] கொலம்பியா பெருங்கண்டத்தின் சேர்க்கை புவியளாவிய மோதல் நிகழ்வுகளாக 2.1–1.8 பில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கக்கூடியதாக கருதுகின்றனர்.
கொலம்பியா மீப்பெருங்கண்டம் முன்னாள் கண்டங்களான லொரேன்சியா, பால்ட்டிக்கா, உக்ரானிய புவித்தட்டு, அமேசோனியப் புவித்தட்டு, ஆஸ்திரலேசியா ஆகியவற்றின் முதல்-கிரேட்டான்களைக் கொண்டு அமைந்திருந்தது; சைபீரியா, வட சீனா, தென் சீனா, கலகாரியா புவித்தட்டுக்களையும் உள்ளடக்கியிருந்திருக்கலாம்.
கொலம்பியா இருந்ததற்கான சான்றுகள் நிலவியல்[2][3] மற்றும் தொன்மைக்காந்தத் தரவுகளைக் கொண்டு நிறுவப்படுகின்றன.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.