கைலாசம் பாலசந்தர்
இயக்குனர், தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 - 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். மேலும் 80-90களின் தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இரு துருவ போட்டி நடிகர்களை அறிமுகம் செய்தவர். அது மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பின்னாளில் அசாத்திய வில்லன் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் தனது நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் அவர்களையே சாரும். மேலும் 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
கை. பாலச்சந்தர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 9 சூலை 1930 (1930-07-09) (அகவை 93) நன்னிலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா ![]() |
இறப்பு | 23 திசம்பர் 2014(2014-12-23) (அகவை 84) சென்னை |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1964–2014 |
வாழ்க்கைத் துணை | ராஜம் |
விருதுகள் |
|