கே. எஸ். பாலச்சந்திரன்
ஈழத்து பல்துறைக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014[1]) ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.
விரைவான உண்மைகள் க. சு. பாலச்சந்திரன், பிறப்பு ...
க. சு. பாலச்சந்திரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1944-07-10)சூலை 10, 1944 கரவெட்டி, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 26, 2014(2014-02-26) (அகவை 69) |
இருப்பிடம் | கனடா |
அறியப்படுவது | நாடக, திரைப்பட நடிகர் |
வலைத்தளம் | |
www.ksbalachandran.ca |
மூடு