![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/Kerry_Washington%252C_Deliver_Commencement_Address_GWU_%25288755052944%2529_%2528cropped%2529_%2528cropped%2529.jpg/640px-Kerry_Washington%252C_Deliver_Commencement_Address_GWU_%25288755052944%2529_%2528cropped%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
கெர்ரி வாசிங்டன்
அமெரிக்க நடிகை / From Wikipedia, the free encyclopedia
கெர்ரி மரிசா வாஷிங்டன் [1] ( Kerry Marisa Washington ) (பிறப்பு: 1977 சனவரி 31) [2][3][4] இவர் ஓர் அமெரிக்க நடிகையாவார். ஏபிசி நாடகத் தொடரான ஸ்கான்டல் (2012–2018) என்பதில், நெருக்கடி மேலாண்மை நிபுணரான ஒலிவியா போப்பாக நடித்ததற்காக இவர் பரந்த பொது அங்கீகாரத்தைப் பெற்றார்.[5] இவரது பாத்திரத்திற்காக, சிறந்த முன்னணி நடிகைக்கான இரண்டு பிரைம் டைம் எம்மி விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு இவர் பரிந்துரைகளைப் பெற்றார். எச்பிஓ தொலைக்காட்சி திரைப்படமான கன்பர்மேஷன் (2016) என்பதில் அனிதா ஹில் என்ற வேடத்தில் நடித்தது, இவருக்கு மற்றொரு பிரைம் டைம் எம்மி விருதுக்கான பரிந்துரையைப் பெற்றது.
கெர்ரி வாசிங்டன் | |
---|---|
![]() 2013இல் வாசிங்டன் | |
பிறப்பு | கெர்ரி மரிசா வாசிங்டன் சனவரி 31, 1977 (1977-01-31) (அகவை 47) நியூயார்க்கு நகரம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜியார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1994 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | Nnamdi Asomugha (தி. 2013) |
பிள்ளைகள் | 2 |
திரைப்படங்களில், வாஷிங்டன் ரே (2004) என்பதில் டெல்லா பீ ராபின்சன், தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லாந்து (2006) என்பதில் கே, 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டின் நேரடி- பெண்டாஸ்டிக் போர் படங்களில் அலிசியா மாஸ்டர்ஸ் மற்றும் ப்ரூம்ஹில்டா ணெ வேடங்களில் நடித்தார். குவென்டின் டேரன்டினோவின் ஜாங்கோ அன்ச்செய்ன்ட் (2012) என்றப் படத்தில் வான் ஷாஃப்ட் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் சாங் (2000), தி டெட் கேர்ள் (2006), மதர் அன்ட் சைல்ட் (2009) மற்றும் நைட் கேட்ச்சஸ் எஸ் (2010) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Kerry_Washington_4_Met_Opera_2010_Shankbone.jpg/640px-Kerry_Washington_4_Met_Opera_2010_Shankbone.jpg)
டைம் பத்திரிகை வாசிங்டனை அதன் டைம் 100 பட்டியலில் 2014 இல் சேர்த்தது.[6] 2018 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இவருக்கு அதிக சம்பளம் வாங்கும் எட்டாவது தொலைக்காட்சி நடிகை என்று பெயரிட்டது.[7]