கெய்சேரி
From Wikipedia, the free encyclopedia
கெய்சேரி (Kayseri, Turkish pronunciation: [ˈKajseɾi] ; கிரேக்கம்: Καισάρεια ) என்பது துருக்கியின் நடு அனடோலியாவில் உள்ள நகரமாகும். இது பெரிய அளவில் தொழில்மயமான ஒரு நகரம் ஆகும். இது கெய்சேரி மாகாணத்தின் தலைநகராக உள்ளது. கெய்சேரி நகரம் கெய்சர மாநகராட்சியின் எல்லைகளால் வரையறுக்கபட்டுள்ளது. இது கட்டமைப்புரீதியாக ஐந்து மாநகர மாவட்டங்களை உள்ளடக்கியது. முதலில் கோகாசினன் மற்றும் மெலிகாசியின் ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டதாகவே இருந்தது. 2004 முதல், ஹாகலர், அன்செசு மற்றும் தலாஸ் ஆகிய மாவட்டங்களும் இதில் உள்ளன.
கெய்சேரியானது செயலற்ற எரிமலையான எர்சியஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது நகரத்தையடுத்து 3,916 மீட்டர்கள் (12,848 அடிகள்) உயரமானதாக இது உள்ளது. துருக்கியின் முதல்தர நகரங்களின் வரையறைக்குடபட்ட முதல் அணியில் இந்த நகரம் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. [1]
செல்யூக் அரசமரபு காலத்தில் தொடங்கி பல வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்த நகரம் கொண்டுள்ளது. கப்படோசியா நகருக்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் இந்த நகரம் உள்ளதால், இது பொதுவாக பார்வையிடப்படுகிறது. கெய்சேரியில் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன: நகர மையத்திலும் அதைச் சுற்றியுள்ள செல்யூக் மற்றும் உதுமானியர் கால நினைவுச் சின்னங்கள் உள்ளன. எர்சியஸ் மலையானது மலையேற்றம் மற்றும் மலையேற்ற பயிற்சி மையமாக உள்ளது. ஜமந்தே ஆறானது ஒரு சறுக்குப்படகு பயண மையமாக உள்ளது. கோல்டெப், அர்னாஸ், தலாஸ் மற்றும் தேவேலியின் வரலாற்று இடங்கள் உள்ளன. கெய்சேரி எர்கிலெட் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் சேவை உள்ளது. இந்நகரம் எர்சியஸ் பல்கலைக்கழகத்தின் தாயகமாகும்.
துருக்கிய புள்ளிவிவர நிறுவனத்தின் கூற்றுப்படி 2011 நிலவரப்படி கெய்சேரி நகரில் 844,656 மக்கள் தொகை இருந்தது; கெய்சேரி மாகாணத்தில் 1,234,651 மக்கள் தொகை இருந்தது. [2] [3]