![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Johor_Premium_Outlets_.tif/lossy-page1-640px-Johor_Premium_Outlets_.tif.jpg&w=640&q=50)
கூலாய்
ஜொகூர், கூலாய் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கூலாய் (ஆங்கிலம்: Kulai; மலாய்: Kulai; சீனம்: 士乃) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கூலாய் மாவட்டத்தின் (Kulai District) தலைநகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் கூலாய், நாடு ...
கூலாய் | |
---|---|
Kulai | |
![]() | |
![]() கூலாய் சிறுதொழில் வளாகம் | |
அடைபெயர்(கள்): கூலாய் ஜெயா, ஆமை நகரம் Kulaijaya, The Turtle Town | |
![]() | |
ஆள்கூறுகள்: 1°40′00″N 103°36′00″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
உள்ளூராட்சி | ![]() |
அமைவு | 1890 |
உள்ளூராட்சி தகுதி | 21 ஏப்ரல் 2004 |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,94,156 |
• தரவரிசை | 31-ஆவது |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய குறியீடு | 810xx |
மலேசிய எண்கள் | +6-07 |
மலேசியப் பதிவெண்கள் | J |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/IOI_Mall_Kulai_%282020%29.jpg/640px-IOI_Mall_Kulai_%282020%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Map_of_Kulai_District%2C_Johor.svg/640px-Map_of_Kulai_District%2C_Johor.svg.png)
இந்த நகரம் முன்பு கூலாய் மாவட்ட மன்றம் (Kulai District Council) எனும் ஊராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் பட்டது. தற்சமயம் கூலாய் நகராட்சி மன்றத்தால் (Kulai Municipal Council) (MPKu) நிர்வகிக்கப் படுகிறது.
கோலாலம்பூர் மாநகரில் இருந்து 302 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 142 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 51 கி.மீ.; ஜொகூர் பாரு நகரத்தில் இருந்து 29 கி.மீ. (18 மைல்); ஸ்கூடாய் (Skudai) நகரத்தில் இருந்து 8 கி.மீ .(5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.