குவெட்டா
From Wikipedia, the free encyclopedia
குவெட்டா பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.[1] இந்த நகரம் 1935 ஆம் ஆண்டில் குவெட்டா பூகம்பத்தில் பாரிய அளவில் சேதமாகியது. பின்பு மீளமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,001,205 மக்கள் வசிக்கின்றனர்.[2] குவெட்டா மாவட்டத்தின் மக்கட் தொகை 2,275,699 ஆகும்.[3] குவெட்டா நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,680 மீற்றர் (5,510 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பாக்கித்தானின் உயரமான ஒரே முக்கிய நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தை சூழ ஏராளமான பழத்தோட்டங்கள் காணப்படுவதாலும், பழங்களின் உற்பத்தி நடைப் பெறுவதாலும் பாக்கித்தானின் பழத்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.[4]
குவெட்டா Quetta کوئٹہ | |
பொது விவரங்கள் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணங்கள் | பலூசிஸ்தான் |
ஆள்கூறுகள் | 30°21′36″N 67°01′12″E |
ஏற்றம் | 1,680 m (5,512 அடி) AMSL |
பரப்பளவு | 2,653 km2 (1,024 sq mi) |
தொலைபேசி குறியீட்டு எண் | 081 |
நேர வலயம் | பாநே (UTC+5) |
நகரங்களின் எண். | 2 |
மக்கள் தொகை | 565,137 (1998) |
Estimate | 759,894 (2006) |
அடர்த்தி | 213/ச.கி.மீ (552/ச.மீ) |
அரசு | |
No. of Union Councils | 66[5] |
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகே வடக்கு பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா நகரம் இரு நாடுகளினதும் வர்த்தக மற்றும் தகவல் தொடர்பு மையமாகும். ஒரு காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையிலான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக இருந்த போலன் பாஸ் பாதைக்கு அருகில் இந்த நகரம் காணப்படுகின்றது. ஆப்கானிய போர்களின் போது பாக்கித்தான் இராணுவப் படைகளுக்கான முக்கிய தளமாக இந் நகரம் விளங்குகின்றது.