குளொனொஸ் (உருசிய மொழியில் ГЛОНАСС, IPA: [ɡlɐˈnas]; Глобальная навигационная спутниковая система, ஒலிபெயர்ப்பு குளோபல்நயா நவிகேசினையா ஸ்புட்னிக்கோவா சிஸ்ரிமா) இது தமிழில் உலகாளாவிய ரீதியிலான செய்மதியூடான வழிநடத்தும் சேவையாகும். இது வான்வெளியில் உருசிய வான்காப்புப் படைகளால் புவியிடங்காட்டிகளுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதாகும். இது புவியிடங்காட்டிகளுக்கு மாற்றீடாகப் பயன்படுவதுடன் இது உலகாளாவிய ரீதியில் இடங்களை புவியிடங்காட்டிகளுடன் ஒப்பீட்டளவில் துல்லியத்தன்மையுடன் வழங்கும் உலகளாவிய ரீதியாலான இரண்டாவது பெரிய செய்மதி சேவையாகும்.[1][2][3]

புவியிடங்காட்டிகளைத் தயாரிப்பவர்கள் புவியிடங்காட்டிச் செய்மதிகளுக்கு மேலதிகமாக குளொனொஸ் செய்மதிகளூடாக புவியின் இடங்களை பல மேலதிக செய்மதிகள் இருப்பதால் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கமுடிவதுடன் பொதுவாக பல கட்டிடங்கள் உள்ள இடங்களில் இதன் மூலமாக சேவையினைத் தடங்கல் இன்றிப் பெற்றுக்கொள்ள இயல்கின்றது. திறன்பேசிகளும் இதையொத்த சிப் (chip) களைப் பாவித்து 2015 ஆம் ஆண்டில் இருந்து புவியிடங்காட்டிகளுக்கு மேலதிகமாக குளொனொசின் சமிக்கைகளையும் பெற்று இடங்களைக் காட்டுகின்றது. 2012 ஆம் ஆண்டில் இருந்து திறன்பேசிகளில் புவியிடங்காட்டிகளுக்கு அடுத்தபடியாக குளொனொஸ் செய்மதிகளே பயன்படுத்தப்படுகின்றது.

குளொனொசின் விருத்தியானது சோவியத் ஒன்றியத்தினால் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 12 அக்டோபர் 1982 முதல் பல்வேறு ராக்கெட்டுகளினால் செய்மதிகள் ஏவப்பட்டு 1995 ஆம் ஆண்டு குளொனெஸ் செய்மதித் தொகுதியானது முழுமையாக்கப்பட்டது. 90 களின் இறுதிக் காலகட்டத்தில் இதன் செய்மதிகளின் எண்ணிக்கையானது படிப்படையாக குறையத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டில் உருசிய அதிபர் வலாடிமிர் புட்டினின் ஆட்சிக்காலத்தில் இதை மீள்விக்குத் திட்டமானது அரசினால் முன்னுருமைப் படுத்தப்பட்டதுடன் இதற்குரிய நிதி ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டது. 2010 இல் உருசிய அரசின் வான் முகவர் அமைப்பில் 3 இல் 1 பங்கு நிதி இத்திட்டத்திற்கே பயன்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டில் உருசிய நிலப்பரப்பில் 100% இச்செய்மதியின் சமிக்கைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகியது. 2011 ஆம் ஆண்டில் இதன் சுற்றுவட்டில் 24 செய்மதிகளும் முழுமையாக்கப்பட்டது இதன் மூலம் உலகளாவிய ரீதியின் இச்செய்மதியில் இருந்து சமிக்கைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகியது. குளொனொஸ் செய்மதிகள் பலவகையில் மேம்படுத்தப்பட்டு தற்போதைய பிந்தைய செய்மதிகள் குளொனொஸ்-கே என்று அழைக்கப்படுகின்றது.

சரித்திரம்

துவக்கமும் வடிவமைப்பும்

உருசியாவில் முதலில் ரிசிக்ளோன் ஊடாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை துல்லியமாக இடமறிவதற்காக உருவாக்கப்பட்டது. 1967 இலிருந்து 1978 வரை 31 ரிசிக்ளோன் செய்மதிகள் வானில் விடப்பட்டது. இது புவியில் நகரமாகல் நிற்பவைகளுக்கும் மெதுவாக நகரும் கப்பலகளுக்கு இட விபரத்தை துல்லியமாக வழங்கினாலும் இடவிபரத்தை சரியாக வழங்க பலமணிநேரம் சென்றது பெரும்பிரச்சினையாக அமைந்ததுடன் புதிய செய்மதியூடாக வழிநடத்தப்படும் ஏவுகணைகளுக்குப் பொருத்தமில்லாததாகவும் இருந்தது. மார்க்கு, வேட். "ரிசிக்ளோன் செய்மதி". பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2016.

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.