![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Circulatory_System_en.svg/langta-640px-Circulatory_System_en.svg.png&w=640&q=50)
குருதிக்குழல்
From Wikipedia, the free encyclopedia
குருதிக்குழல்கள் அல்லது குருதிக் குழாய்கள் அல்லது இரத்தக் குழாய்கள் (blood vessels) உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு உதவும் குருதி சுற்றோட்டத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மூன்று பிரதான குருதிக்குழல் வகைகள் உள்ளன: இதயத்திலிருந்து இரத்தத்தினை எடுத்துச் செல்லும் தமனிகள் அல்லது நாடிகள் (இலங்கை வழக்கு); திசுக்களுக்கும் குருதிக்கும் இடையில் நீர் மற்றும் வேதிப்பொருள்களை பரிமாற்றம் செய்ய உதவும் இரத்தத் தந்துகிகள் அல்லது மயிர்க்கலன்கள்; இரத்தத்தை தந்துகிகளிலிருந்து மீண்டும் இதயத்திற்கு திரும்ப எடுத்துச் செல்லும் சிரைகள் அல்லது நாளங்கள்[1].
விரைவான உண்மைகள் இரத்தக் குழாய், விளக்கங்கள் ...
இரத்தக் குழாய் | |
---|---|
![]() மனிதரின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் எளிய வரைபடம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vas sanguineum |
MeSH | D001808 |
TA98 | A12.0.00.001 |
TA2 | 3895 |
FMA | 63183 |
உடற்கூற்றியல் |
மூடு