கிரேஸ் அனாடமி என்பது (Grey's Anatomy) அமெரிக்காவில் பரவலாக பார்க்கப்படும் மருத்துவத்துறை தொடர்புள்ள ஓர் தொலைக்காட்சித் தொடர். வாஷிங்டன், சியாட்டிலில் உள்ளதாகப் புனையப்பட்ட சியாட்டில் கிரேஸ்-மெர்சி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி பெறும் பயிற்சி மருத்துவர்கள்,மாணவ மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டத் தொடராகும். இதன் முதல் நிகழ்வு "ஓர் கடினமான நாளின் இரவு" (A Hard Day's Night) மார்ச் 27,2005 அன்று ஏபிசி நிறுவனத்தால் ஒளிபரப்பப் பட்டது. அதுமுதல் ஆறு பருவங்கள் ஒளிபரப்பாயுள்ளன. ஏழாவது பருவத்தின் முதல் நிகழ்வு 23 செப்டம்பர்,2010 அன்று ஒளிபரப்பானது.[3]

விரைவான உண்மைகள் கிரேஸ் அனாடமி, வகை ...
கிரேஸ் அனாடமி
Thumb
வகைமருத்துவ தொலைக்காட்சித்தொடர்
நகைச்சுவை
உருவாக்கம்ஷோண்டா ரைம்ஸ்
நடிப்புஎல்லன் பொம்பியோ
சாண்ட்ரா ஓ
காதரீன் ஹைக்ல்
ஜஸ்டின் சாம்பர்ஸ்
டி.ஆர்.நைட்
சந்திரா வில்சன்
ஜேம்ஸ் பிக்கென்ஸ்,ஜூனியர்
கேட் வால்ஷ்
சாரா ராமிரேஸ்
எரிக் டேன்
கைலர் லே
புரூக் ஸ்மித்
கெவின் மக்கிட்
ஜெசிகா காப்ஷா
கிம் ராவர்
ஜெஸ் வில்லியம்ஸ்[1]
சாரா ட்ரூ[2]
ஐசையா வாசிங்டன்
பாட்ரிக் டெம்ப்சி
கதைசொல்லிஎல்லன் பொம்பியோ (பெரும்பாலும்)
முகப்பு இசைசாப்
முகப்பிசை"Cosy in the Rocket"
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்7
அத்தியாயங்கள்126 (list of episodes)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஷோண்டா ரைம்ஸ்
பெட்சி பீர்ஸ்
மார்க் கார்டன்
கிரிஸ்டா வெர்னாஃப்
ராப் கார்ன்
மார்க் வில்டிங்
எட்வர்ட் ஓர்னலாஸ்
படப்பிடிப்பு தளங்கள்லாஸ் ஏஞ்சலஸ்
ஓட்டம்43 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஏபிசி
படவடிவம்480ஐ (சீர்தர வரையறை தொலைக்காட்சி)
720பி (உயர்தர வரையறைத் தொலைக்காட்சி)
ஒலிவடிவம்பிரிப்பிசை, டோல்பி எண்மருவி 5.1
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 27, 2005 (2005-03-27) 
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்பிரைவேட் பிராக்டீஸ் தொலைக்காட்சித் தொடர்
வெளியிணைப்புகள்
இணையதளம்
மூடு

பலராலும் பாராட்டப்பட்டும் வணிக வெற்றியாகவும் திகழும் இத்தொடர் துவக்கத்தில் பாஸ்டன் லீகல் என்றத் தொடரின் பருவங்களுக்கிடையேயான இடைவெளிக்காக தயாரிக்கப்பட்டது. முதல் நிகழ்விற்கே 16.25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து[4] முதல் பருவ இறுதியில் 22.22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது.[5] மூன்று எம்மி விருதுகளையும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்று முதன்மை நேரத்தில் காண்கின்ற தொலைக்காட்சித் தொடர்களில் மிகக் கூடுதலாக பார்க்கப்படும் தொடராக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.