![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c9/Krishnagiri_Fort_Hill.jpg/640px-Krishnagiri_Fort_Hill.jpg&w=640&q=50)
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கிருஷ்ணகிரி கட்டுரையைப் பார்க்க.
கிருட்டிணகிரி மாவட்டம் (Krishnagiri district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருட்டிணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30-ஆவது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டம் மலைகள் நிறைந்து காணப்படுகின்றன.
கிருட்டிணகிரி | |
மாவட்டம் | |
![]() கிருட்டிணகிரியில் உள்ள மலை | |
![]() கிருட்டிணகிரி மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | கிருட்டிணகிரி |
பகுதி | மழவர் நாடு |
மாவட்ட ஆட்சியர் | திருமதி. கே.எம். சரயு, இ. ஆ. ப |
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. சரோஜ் குமார் இ. கா. ப |
மாநகராட்சி | 1 |
நகராட்சி | 1 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 8 |
பேரூராட்சிகள் | 6 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 10 |
ஊராட்சிகள் | 333 |
வருவாய் கிராமங்கள் | 636 |
சட்டமன்றத் தொகுதிகள் | 6 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 5143 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
18,79,809 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
635 001 |
தொலைபேசிக் குறியீடு |
04343 |
வாகனப் பதிவு |
TN 24, TN 70 |
பாலின விகிதம் |
958 ♂/♀ |
கல்வியறிவு |
71.46% |
இணையதளம் | krishnagiri |
இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.