உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
காசீப்பூர் மாவட்டம் (இந்தி: ग़ाज़ीपुर ज़िला, உருது: غازیپور ضلع Ghāzīpur Zilā) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. காசீப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் வாரனாசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. காசீப்பூர் ஆனது இங்கு உருவாக்கப்படும் ரோஜாவின் நறுமணம் கொண்ட வாசனைத் திரவியமான குலாப் ஜல்லுக்கு பிரபலமானது. மேலும் இங்கு பிரித்தானிய இந்தியாவின் வைசிராயான லார்டு கார்ன்வல்லிஸின் கல்லறை அமைந்துள்ளது. லார்டு கார்ன்வல்லிஸ் காசீப்பூரில் மரணமடைந்தார். இம்மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் அமைத்துள்ள இவரின் கல்லறையானது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது.
காசீப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வாரனாசி |
தலைமையகம் | காசீப்பூர் |
பரப்பு | 3,384 km2 (1,307 sq mi) |
மக்கட்தொகை | 3,622,727, (2011) |
படிப்பறிவு | 74.27% |
வட்டங்கள் | 5 |
மக்களவைத்தொகுதிகள் | காசீப்பூர் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1034 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காசீப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,622,727.[1] இது தோராயமாக லித்துவேனியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 79வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,072 inhabitants per square kilometre (2,780/sq mi).[1] மேலும் காசீப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 19.26%.[1]காசீப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் காசீப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.27%.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.