காச நோய்
தொற்றுநோய் / From Wikipedia, the free encyclopedia
என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
- மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis),
- மைக்கோபாக்டீரியம் ஆப்பிரிக்கானம் (Mycobacterium africanum),
- மைக்கோபாக்டீரியம் கனெட்டி (Mycobacterium canetti),
- மைக்கோபாக்டீரியம் மைக்குரோட்டி (Mycobacterium microti) முதலான நுண்ணுயிரிகளாலும் தூண்டப்படலாம்[1].
விரைவான உண்மைகள் என்புருக்கி நோய் (காச நோய்), வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
என்புருக்கி நோய் (காச நோய்) | |
---|---|
என்புருக்கிநோய் பாதிப்புக்குள்ளான ஒரு நோயாளியின் நெஞ்சுப் பகுதியின் X-கதிர் படம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases, pulmonology |
ஐ.சி.டி.-10 | A15.-A19. |
ஐ.சி.டி.-9 | 010-018 |
ம.இ.மெ.ம | 607948 |
நோய்களின் தரவுத்தளம் | 8515 |
மெரிசின்பிளசு | 000077 000624 |
ஈமெடிசின் | med/2324 emerg/618 radio/411 |
பேசியண்ட் ஐ.இ | காச நோய் |
ம.பா.த | D014376 |
மூடு