கலகாரிப் பாலைவனம்
From Wikipedia, the free encyclopedia
கலகாரிப் பாலைவனம் (Kalahari Desert) (ஆஃப்ரிகான்ஸ்: Kalahari-woestyn) எனும் இது, தென்னாப்பிரிக்கா பிராந்தியத்தில் வியாபித்திருக்கும் வறண்ட வனாந்தரப் புன்னிலமாகும். புவியியல் பாலைவனங்களின் பட்டியலில் பங்குபெறும் இது, தென்னாப்பிரிக்காவிலிருந்து போட்சுவானாவரையில் பரந்துவிரிந்த பெரும்பாலைவனமாக அறியப்படுகிறது. ஆண்டொன்றுக்கு குறைந்தது 110-200 மில்லிமீட்டர் (4.3-7.9 அங்குலம்) முதல், அதிகப்படியாக 500 மில்லிமீட்டர் (20 அங்குலம்) மழையே இங்கு பெய்கிறது. இங்குள்ள நில ஈரப்பதம், ஒரு மாதத்திற்குள்ளாகவே வறண்டுவிடுவதாக உள்ளது.[1]
விரைவான உண்மைகள் நாடு, அடையாளச் சின்னங்கள் ...
கலகாரிப் பாலைவனம் | |
Kalahari Desert | |
கலகாரிப் பாலைவனம், செயற்கைக்கோள் படிமம் | |
நாடு | போட்சுவானா நமீபியா தென்னாப்பிரிக்கா |
---|---|
அடையாளச் சின்னங்கள் |
போட்சுவானா மான் தேசிய பூங்கா, மத்திய கலகாரி, சோபே தேசிய பூங்கா, கலகாரி வடிநிலம், கலகாரி மான் தேசிய பூங்கா, கலகாரி எல்லைப்புற பூங்கா, மக்கடிக்காடி பான்ஸ் |
ஆறு | செம்மஞ்சள் நதி |
மிகவுயர் புள்ளி | பிரண்ட்பெர்க்கு மலை 8,550 அடி (2,610 m) |
- ஆள்கூறுகள் | 21°07′S 14°33′E |
நீளம் | 4,000 கிமீ (2,485 மைல்), E/W |
பரப்பு | 9,30,000 கிமீ² (3,59,075 ச.மைல்) |
Biome | மிதவறட்சி பாலைவனம் |
கலகாரி பாலைவனம் (அரக்கு நிறத்தில்), கலகாரி வடிநிலம் (செம்மஞ்சள்)
|
மூடு