கருங்கொட்டு கதிர்க்குருவி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
கருங்கொட்டுக் கதிர்க்குருவி (Zitting Cisticola, Cisticola juncidis) அல்லது விசிறிவால் கதிர்க்குருவி, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்காசியா தொடங்கி வட அவுஸ்திரேலியா வரை பரவலாகக் காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்கக் காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து, ஒருவித ஒலியெழுப்பும். அவ்வொலி கத்தரிக்கோலால் தொடர்ந்து வெட்டுவது போன்ற ஒலியை ஒத்ததாக இருக்கும்.
விரைவான உண்மைகள் கருங்கொட்டு கதிர்க்குருவி, காப்பு நிலை ...
கருங்கொட்டு கதிர்க்குருவி | |
---|---|
குறிசுடென்சு சிற்றினக் கருங்கொட்டு கதிர்க்குருவி, இலங்கை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிஸ்டிகொலிடே |
பேரினம்: | சிஸ்டிகோலா |
இனம்: | சி. யங்சிடிஸ் |
இருசொற் பெயரீடு | |
சிஸ்டிகோலா யங்சிடிஸ் (ராபின்ஸ்கியு, 1810) | |
மூடு