கம்பார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கம்பார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kampar Railway Station மலாய்: Stesen Keretapi Kampar); சீனம்: 金宝火车站) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம், கம்பார் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். மம்பாங் டி அவான், ஜெராம், கோலா டிப்பாங் மற்றும் மாலிம் நாவார் ஆகிய நகரங்களுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.
கம்பார் Kampar | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கம்பார் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | 31900, கம்பார், மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°18′9″N 101°9′13″E | |||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | |||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் KTMB நிறுத்துமிடம் | |||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1895 | |||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 1965 (முதல் முறை), 2007 (தற்போது) | |||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2007 | |||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
|
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் கம்பார் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது. ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2007-ஆம் ஆண்டில், கம்பார் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.
கம்பார் தொடருந்து நிலையம், கம்பார் நகரின் தென்கிழக்குப் பகுதியில், தாமான் மலாயு ஜெயா (Taman Melayu Jaya) எனப்படும் வீட்டு மனைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் புதிய நவீன நிலையம் 2007-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தொடருந்தில் செல்வதற்கு வசதியாக மலேசிய போக்குவரத்து அமைச்சு இந்தத் தொடருந்து நிலையத்தில் இரண்டு மின்தூக்கிகளைக் கட்டித் தந்துள்ளது.
இந்த நிலையம் பழைய கம்பார் நகரின் தென்மேற்குப் பகுதியில், மலாயு ஜெயா குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைப் பழைய கம்பார் நகரில் இருந்து நேரடிச் சாலை வழியாகவும் அல்லது கூட்டரசு சாலை 1 வழியாகவும் அணுகலாம்.
இந்த நிலையம், முக்கியமாக கம்பார் நகரத்திற்குச் சேவை செய்கிறது. இதில் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Universiti Tunku Abdul Rahman) மற்றும் அதைச் சுற்றியுள்ள புதிய கம்பார் நகரமும் (New Town) அடங்கும். தெம்புரோங் குகை மற்றும் பண்டார் அகாசியா ஆகியவை இந்த நிலையத்தில் இருந்து சற்று அருகில் அமைந்துள்ளன.
கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.
கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [1][2]
அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.
கம்பார் (Kampar)நகரம் பேராக் மாநிலத்தில் உள்ளது. கம்பார் மாவட்டத்தில் உள்ள கம்பார் நகரம் மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[3] 2007-ஆம் ஆண்டு மே மாதம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு பேராக் மாநில அரசு 1300 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கியது. அதன் பின்னர் பண்டார் பாரு கம்பார் எனும் ஒரு புதுத் துணை நகரம் தோற்றுவிக்கப் பட்டது. இந்தத் துணை நகரத்தில் 20,000 மாணவர்கள் உயர் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் காணப்படுகின்றன.[4]
கம்பார் நகரம் கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கிறது. கிந்தா பள்ளத்தாக்கு ஈயக் கனிமத்திற்கு பெயர் போன இடம். ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட இடங்கள் ஈயக் குட்டைகளாக மாறியுள்ளன. அந்தக் குட்டைகளில் இப்போது மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன் வளர்ப்புத் துறை உபரி வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக மாறி வருகிறது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.