கனூரி மக்கள்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கனூரி மக்கள், இன்றைய நைகர், நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் இருந்த முன்னாள் கானெம் பேரரசு, போர்னு பேரரசு ஆகியவற்றின் நிலப்பகுதிகளில் வாழும் ஒரு இனக்குழு ஆகும். கனூரி எனப் பொதுவாக அழைக்கப்படுபவர்களில், பல்வேறு துணைக் குழுக்களும், கிளைமொழிக் குழுக்களும் அடங்குகின்றன. இவர்களுட் சிலர் தாம் கனூரிகளிலிருந்து வேறானவர்கள் என உணர்கின்றனர். பெரும்பாலானவர்கள் தாம் மத்தியகால கானெம்-போர்னு பேரரசின் அல்லது அதன் மாகாணங்களின் ஆட்சியாளர்களின் கால்வழிகளில் இருந்து தோன்றியவர்கள் என நம்புகின்றனர். அயலவர்களான டூபூ அல்லது சாகாவா இடையர் குழுக்களுடன் ஒப்பிடும்போது கனூரிக் குழுக்கள் மரபுவழியாக உடலுழைப்புக் குறைந்தவர்கள். இவர்கள் வேளாண்மை, சாட் ஏரியில் மீன் பிடித்தல், வணிகம், உப்பு விளைவித்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள்.[5]
அலி மோடு செரீஃப், ஒரு கனூரி அரசியல்வாதியும் நைசீரியாவின் போர்னோ மாநிலத்தின் ஆளுனரும், 2007 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(10 மில்லியன் (2013 மதிப்பீடு)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
நைசீரியா, தென்கிழக்கு நைகர், மேற்கு சாட் மற்றும் வட கமரூன். | |
நைஜீரியா | 6,980,000(2013) மங்காரி உள்ளடக்கப்படவில்லை[1] |
சாட் | 1,100,000 (2013) இதில் பெரும்பாலானவர்கள் கனெம்பு துணைக்குழு[2] |
நைஜர் | 850,000 (2013) மங்காரி, துமாரி, பிளா பிளா ஆகியோரை உள்ளடக்கியது.[3] |
கமரூன் | 56,000 (1982)[4] |
மொழி(கள்) | |
கனூரி மொழி | |
சமயங்கள் | |
இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கனெம்பு மக்கள், சகாவா, அவுசா, சுவா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.