![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/%25C3%2587anakkale_in_Turkey.svg/langta-640px-%25C3%2587anakkale_in_Turkey.svg.png&w=640&q=50)
கனக்கலே மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கனக்கலே மாகாணம் (Çanakkale Province, துருக்கியம்: Çanakkale ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெயரானது கனக்கலே நகரத்திலிருந்து வந்தது .
விரைவான உண்மைகள் கனக்கலே மாகாணம் Çanakkale ili, நாடு ...
கனக்கலே மாகாணம்
Çanakkale ili | |
---|---|
![]() துருக்கியில் கனக்கலே மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 40°02′27″N 26°33′37″E | |
நாடு | துருக்கி |
பகுதி | மேற்கு மர்மாரா |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | கனக்கலே |
• ஆளுநர் | இஹ்மி அக்டஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,737 km2 (3,759 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 5,40,662 |
• அடர்த்தி | 56/km2 (140/sq mi) |
இடக் குறியீடு | 0286 |
வாகனப் பதிவு | 17 |
மூடு
இசுதான்புல்லைப் போலவே, கனக்கலே மாகாணத்திலும் ஒரு ஐரோப்பிய ( திரேசு ) மற்றும் ஒரு ஆசிய ( அனத்தோலியா ) பகுதி உள்ளது. ஐரோப்பிய பகுதி கல்லிப்போலி (கெலிபோலு) தீபகற்பத்தால் உருவனது, அதே நேரத்தில் ஆசிய பகுதி அனத்தோலியாவில் உள்ள வரலாற்றுப் பகுதியான டிராட் பகுதியுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது. மர்மரா கடல் மற்றும் ஏஜியன் கடலை இணைக்கும் தார்தனெல்சு நீரிணையால் அவை பிரிக்கப்படுகின்றன.
திராய் தொல்லியல் தளம் அனக்கலே மாகாணத்தில் காணப்படுகிறது.