![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/PacificWhiteSidedDolphine.jpg/640px-PacificWhiteSidedDolphine.jpg&w=640&q=50)
கடல் ஓங்கில்
From Wikipedia, the free encyclopedia
கடல் ஓங்கில் (Delphinidae) என்பது கடலில் வாழும் ஓங்கில் குடும்பம் ஆகும். இதில் மொத்தம் 20 வாழும் இனங்கள் உள்ளன. இவை சராசரியாக 1.7 மீட்டர் நீளமும் 50 கிலோ எடையும் கொண்டவை. இக்குடும்பத்தைச் சேர்ந்த கொலைகாரத் திமிங்கிலம் என்ற இனம் இதுவரை அறியபட்ட ஓங்கில்களிலேயே மிகப் பெரியது ஆகும்.
விரைவான உண்மைகள் கடல் ஓங்கில், உயிரியல் வகைப்பாடு ...
கடல் ஓங்கில் | |
---|---|
![]() | |
பசிபிக் ஓங்கில்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | ஓங்கில் வகையி |
குடும்பம்: | கடல் ஓங்கில் |
Genera | |
See text |
மூடு
கடல் ஓங்கில்கள் பொதுவாக மீன் மற்றும் கணவாய் போன்ற உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. எனினும் கொலைகாரத் திமிங்கிலம் போன்ற மிகப்பெரிய கடல் ஓங்கில்களானது கடல் நாய் போன்ற கடற்பாலூட்டிகளையும் உண்டு வாழ்கின்றன. பெரும்பாலும் பெண் ஓங்கில்களை விட ஆண் ஓங்கில்களே உருவில் பெரியதாக இருக்கும். எனவே அவை பால் ஈருருமை பண்பை வெளிப்படுத்துகின்றன.[1][2]