![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Cannabis_sativa_Koehler_drawing.jpg/640px-Cannabis_sativa_Koehler_drawing.jpg&w=640&q=50)
கஞ்சா
From Wikipedia, the free encyclopedia
கஞ்சா (ஒலிப்புⓘ) (Cannabis) (/ˈkænəbɪs/; Cán-na-bis) கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால் இது மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு இண்டிக்கா (Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு (Cannabis ruderalis). இந்த மூன்றும் C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.[2][3][4][5] இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை.[6]
கஞ்சா | |
---|---|
![]() | |
கஞ்சா தாவரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | ரோசால்ஸ் |
குடும்பம்: | கேனபேசியே |
பேரினம்: | கேனபிஸ் |
இனங்கள் | |
கேனபிஸ் சட்டைவா L.[1] |
நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் உளத்தூண்டல் கூறான டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC (கானபினாய்டுகள்) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.[7]
2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது.[8] 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)[9] இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.[9]