கங்கார்
மலேசியாவிலுள்ள ஒரு பெரிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
கங்கார் (Kangar) என்பது மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[1] இதன் மக்கள் தொகை 48,898. பரப்பளவு 2,619.4 ஹெக்டர். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் பெர்லிஸ் ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது.[2][3] காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்துதான் கங்கார் நகரத்தின் பெயர் உருவானது.
கங்கார்
Kangar தலைநகரம் | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°26′N 100°12′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
கோத்தா செனா உருவாக்கம் | 1653 |
அரசு | |
• மேயர் (டத்தோ பண்டார்) | கங்கார் நகராட்சி மன்றம் |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
இணையதளம் | mpkangar.gov.my/ |
இந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப் படுகிறது. அந்த நெல் உற்பத்தியைச் சேகரிக்கும் மையமாகவும் இந்த நகரம் விளங்குகிறது. கங்கார் நகராட்சி மன்றம் ஆராவ் மற்றும் காக்கி புக்கிட் ஆகிய அண்டை நகராட்சி மன்றங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது.
கங்கார் நகரத்தின் மையத்தில் சேனா மாவட்டாரம் (Sena Province) உள்ளது. இந்த நகரம் மலேசியாவின் மிகச் சிறிய மாநிலத் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள்; அரசு ஊழியர்கள். இதன் தொழில்கள்: பைஞ்சுதை தயாரிப்பு; மரப் பலகை தயாரிப்பு; ரப்பர் உற்பத்தி; காகிதத் தயாரிப்பு; சீனி தயாரிப்பு; இறால் மீன்களை பதப்படுத்துதல் ஆகியவையாகும்.[4]