From Wikipedia, the free encyclopedia
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபு மொழி: جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn, Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும்.[1] இதன் சரிவுப் பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவ மலை என்ற பெயர் கிடைத்தது. இதன் தென் பகுதி பண்டைய யூதேய அரசின் இடுகாடாகவிருந்தது.[2] இம்மலை யூதப் பாரம்பரியத்தின் மத்தியமாகவிருக்கிறது. இது 3,000 வருடங்களாக யூதர்களின் இடுகாடாக இருந்து வந்து, கிட்டத்தட்ட 150,000 சமாதிகளைக் கொண்டுள்ளது.[3] இயேசுவின் வாழ்வின் சில முக்கிய சம்பவங்கள் நற்செய்திகளில் தொடர்புள்ளவாறு இங்கு இடம்பெற்றுள்ளன. திருத்தூதர் பணிகள் இங்கிருந்துதான் இயேசு விண்ணகம் சென்றார் எனக் குறிப்பிடுகின்றது. இயேசுவுடனும் மரியாளுடனும் இப்பகுதி தொடர்பு பெறுவதால் பண்டைய காலந்தொட்டு இன்று முதல் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தளமாகவும் கிழக்கு, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து கிறித்தவர்களின் முக்கிய யாத்திரைத்தளமாகவும் இது விளங்குகின்றது.
ஒலிவ மலை | |
---|---|
הַר הַזֵּיתִים, Har HaZeitim جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 826 m (2,710 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | யெருசலேம் |
மூலத் தொடர் | யூதேயா மலைகள் |
நிலவியல் | |
மலையின் வகை | </ref> |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.