From Wikipedia, the free encyclopedia
ஒரன்பூர்க் மாகாணம் (Orenburg Oblast உருசியம்: Оренбу́ргская о́бласть, ஒரன்பூர்க்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் ஒரன்பூர்க் ஆகும். இது உருவாக்கப்பட்ட 1938 முதல் 1957 வரை, இதன் பெயர் சிக்காலோவ் மாகாணம் என்று சோவியத் வீரரான வேலெரி சக்காலவ் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. இதன் மக்கள்தொகை: 2,033,072 ஆகும் (2010 கணக்கெடுப்பு)[5]
ஒரன்பூர்க் மாகாணம் Orenburg Oblast | |
---|---|
Оренбургская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வோல்கா[1] |
பொருளாதாரப் பகுதி | உரால்[2] |
நிருவாக மையம் | ஒரன்புர்க் |
அரசு | |
• நிர்வாகம் | ஒரன்பூர்க் சட்டமன்றம் |
• ஆளுநர் | யூரி பெர்க்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,24,000 km2 (48,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 29வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 20,33,072 |
• மதிப்பீடு (2018)[6] | 19,77,720 (−2.7%) |
• தரவரிசை | 23வது |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
• நகர்ப்புறம் | 59.7% |
• நாட்டுப்புறம் | 40.3% |
நேர வலயம் | ஒசநே+5 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-ORE |
அனுமதி இலக்கத்தகடு | 56 |
OKTMO ஐடி | 53000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.orb.ru/ |
இந்த மாகாணத்தின் மிக முக்கியமான நதி உரால் ஆகும்.
இதன் மக்கள் தொகை: 2,033,072 ( 2010 கணக்கெடுப்பு ) 2,179,551 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,174,459 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 முக்கிய புள்ளி விபரங்கள்
2009 - 1.76 | 2010 - 1.80 | 2011 - 1.80 | 2012 - 1.95 | 2013 - 2.00 | 2014 - 2.02 (உ)
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்த ஒப்ளாஸ்ட்டில் இனக் குழுக்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு இருந்தது:[10]
30.449 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடாதவர்கள்.[11]
2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி ஒரன்பூர்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 40.2% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 3% பொதுவான கிருத்துவர் (கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் நீங்கலாக), 2% மேற்கத்திய மரபுவழி கிருத்தவர். 13% முஸ்லிம்கள் பெண்கள் ஆவார்கள் மக்கள் தொகை. 3% மக்கள் தொகையினர் ஸ்லாவிக் நாட்டப்பற மதத்தினர், 6.8% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கணக்கெடுப்பின்போது மதத்தைப் பற்றி பதில் தராதவர்கள் ஆவர். 20% "ஆன்மீக நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர்.[12]
ஒரன்பூர்க் ஒப்லாஸ்து ரஷ்யாவின் முதன்மையான விவசாய பகுதிகளில் ஒன்றாகும். இதன் காலநிலை வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. ஈரப்பதமான வசந்தகால காற்றும், வறண்ட கோடைக்கால காற்றும் கொண்டது. இங்கு கோதுமை, கம்பு , சூரியகாந்தி , உருளைக்கிழங்கு , பட்டாணி , பீன்ஸ் , சோளம் , போன்றவை விளைகின்றன. இந்த ஒப்ளாஸ்ட்டின் ஏற்றுமதி பொருட்கள் எண்ணெய் மற்றும் எண்ணெய்சார்ந்த பொருட்களும், எரிவாயு மற்றும் எரிவாயுசார்ந்த பொருட்களும், இரும்பு மற்றும் இரும்பு பொருட்களும், நிக்கல் , கல்நார் , குரோமியம் கலவைகள், கடின தாமிரம், மின்சார இயந்திரங்கள், ரேடியேட்டர்கள், இயந்திரங்கள், கட்டுமான தொழில் தயாரிப்புகள் போன்றவை ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.