ஏர் அரேபியா (Air Arabia, அரபு மொழி: العربية للطيران, அல் அரேபியா லில் த‌ய‌ரான்) என்ப‌து ஷார்ஜா ந‌க‌ர‌த்தைத் த‌லைமைய‌க‌மாக‌க் கொண்டுள்ள‌ ம‌த்திய‌ கிழ‌க்கைச் சேர்ந்த‌ ஒரு தாழ்விலை விமான‌ சேவை நிறுவ‌ன‌மாகும். அத‌ன் முத‌ன்மை த‌ள‌ம் ஷார்ஜா ப‌ன்னாட்டு விமான‌நிலைய‌ம் ஆகும். இந்நிறுவ‌ன‌ம் ம‌த்திய‌ கிழ‌க்கு, ம‌த்திய‌ ஆசியா, இந்திய‌த் துணைக்க‌ண்ட‌ம், ஐரோப்பா ஆகிய‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளில் 46 இட‌ங்க‌ளுக்கு முறைப்ப‌டி வான்சேவைக‌ளைக் கொண்டுள்ள‌து.[1]

விரைவான உண்மைகள் IATA, ICAO ...
ஏர் அரேபியா
Thumb
IATA ICAO அழைப்புக் குறியீடு
G9 ABY அரேபியா
நிறுவல்பெப்ரவரி 3, 2003
செயற்பாடு துவக்கம்அக்டோபர் 28, 2003
செயற்படு தளங்கள்சார்ஜா பன்னாட்டு விமானநிலையம்
கூட்டணிArab Air Carriers Organization
கிளை நிறுவனங்கள்
  • ஏர் அரேபியா எகிப்து
  • ஏர் அரேபியா ஜோர்டான்
  • Air Arabia Maroc
வானூர்தி எண்ணிக்கை22
சேரிடங்கள்57
தலைமையிடம்சார்ஜா பன்னாட்டு விமானநிலையம்
சார்ஜா, அமீரகம்
முக்கிய நபர்கள்ஆதில் அலி (CEO)
வலைத்தளம்airarabia.com
மூடு

இதன் முக்கிய தளம் ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆகும். மற்ற குறைந்த கட்டண விமான சேவைகளுடன் ஒப்பிடும்போது இதிலுள்ள வித்தியாசம் என்னவென்றால், இதன் முக்கிய மையமான ஷார்ஜாவிலேயே பல விமானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது தான். மேலும் அலெக்ஸாண்டரியா மற்றும் காஸாப்ளான்கா நாடுகளிலும் முக்கிய நகரங்களை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. அரபு ஏர் கேரியர் ஒருங்கிணைப்பின் ஓர் அங்கத்தினராகவும் ஏர் அரேபியா உள்ளது.

வ‌ர‌லாறு

இந்நிறுவ‌ன‌ம் ஃபிப்ர‌வ‌ரி 2003இல் நிறுவ‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் முத‌ல் ப‌ற‌ப்பு ஷார்ஜாவிலிருந்து ப‌ஹ்ரெயின் இடையில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. முத‌ல் ஆண்டிலிருந்தே இது இலாப‌த்தைத் திர‌ட்டிய‌து.

ஏர் அரேபியா பிப்ரவரி 3, 2003 ஆம் ஆண்டில், அமிரி டெக்ரீ அவர்களால் நிறுவப்பட்டது. இவர் ‘சுப்ரீம் கவுன்சில் ஆஃப் த யுனைடட் அரபு எமிரேட்ஸ்’-இன் உறுப்பினர் ஆவார். இப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட முதல் குறைந்த கட்டண விமானச் சேவை இதுவாகும். 28 அக்டோபர் 2003 ஆம் ஆண்டில், ஷார்ஜாவிலிருந்து பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு, தனது முதல் விமானத்தினை அனுப்பியதன் முதல் விமான சேவையினைத் தொடங்கியது. முதலாம் ஆண்டு முடிந்த உடனே லாபம் தரும் நிறுவனமாக மாறியது.[1]

கார்பரேட் விவகாரங்கள்

Thumb
An Air Arabia Airbus A320-200 approaching Toulouse–Blagnac Airport (2012)

தலைமையகங்கள்

ஷார்ஜா விமான நிலைய சரக்கு மையத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. மத்திய துபாயில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் (9.30 மைல்) தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

கூட்டு முயற்சி

Thumb
An Air Arabia Airbus A320-200 (2012)

ஏர் அரேபியா மூன்று சர்வதேச தளங்களில் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் இருந்த அல்லது இருக்கக்கூடிய நாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • எகிப்து
  • ஜோர்டான்
  • மொராக்கோ
  • நேபாளம்

எகிப்து

ஏர் அரேபியா எகிப்து (2009 முதல் தற்போது வரை) – 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி எகிப்தின் அலெக்ஸாண்டரியாவினை மையமாகக் கொண்டு எகிப்தின் பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான டிராவ்கோ குழுவுடன் இணைந்து செயல்படும் என அறிவித்தது. இதற்கான செயல்பாட்டு உரிமத்தினை மே 22, 2010 இல் பெற்றது மற்றும் இதற்கான விமானச் சேவை ஜூன் 1, 2010 முதல் ஆரம்பிக்கப்பட்டன. ஏர் அரேபியா எகிப்தின் விமானக் குழுமத்தில் மூன்று விமானங்கள் செயல்படுகின்றன.

ஜோர்டான்

ஏர் அரேபியா ஜோர்டான் – ஜூன் 7, 2010 இல் ஏர் அரேபியா டான்டேஷ் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி ஏர் அரேபியா ஜோர்டான் குயின் அலியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா[2] ஆகிய இடங்களுக்கு தனது விமானச் சேவையினை தொடங்கியது.

மொராக்கோ

ஏர் அரேபியா மொராக்கோ (2009 முதல் தற்போது வரை) – 2007 ஆம் ஆண்டில் மொராக்கன் முதலீட்டாளர்களுடன் சேர்ந்து ஏர் அரேபியா மொராக்கோவினை தொடங்கியது. அதன்படி மொராக்காவின் பெரிய நகரமான காஸாப்ளான்காவில் தனது இரண்டாவது தளத்தினை அமைத்தது. மே 6, 2009 முதல் இது தனது விமானச் சேவையினைத் தொடங்கியது. அதன் பின்பு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு தனது சேவையினை விரிவடையச் செய்தது. மொராக்கோவின் விமானக் குழுவானது ஐரோப்பாவினை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய நான்கு விமானங்களைக் கொண்டுள்ளது.

நேபாளம்

ஃப்ளை யெட்டி (2007 முதல் 2008 வரை) – 2007 ஆம் ஆண்டில் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் ஏர் அரேபியா நிறுவனம் தனது தளத்தினை நிறுவியது. யெட்டி விமானச்சேவையுடன் சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தியது. இதன் மூலம் ஏர் அரேபியாவினால் காத்மாண்டுவிலிருந்து ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது சேவையினை விரிவுபடுத்த முடிந்தது. அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இலக்குகள்

பிப்ரவரி 2014 ன் படி, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 90 விமான நிலையங்களில் ஏர் அரேபியா தனது சேவையினைத் தொடர்கிறது. அத்துடன் எகிப்து மற்றும் கைரோ நாடுகளின் பகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.[3] [6][4]

விமானக் குழுமங்கள்

ஏர் அரேபியா விமானச் சேவை சராசரியாக 3.2 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட 22 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களைக் கொண்டுள்ளன. அனைத்து விமானங்களும் 162 இருக்கைகளுடன் இருப்பது விமானச் சேவையின் பொருளாதார ரீதியாக மற்றுமொரு பலமாக உள்ளது.[5]

ஏர் அரேபியாவின் உயர் பகுதிகள்

டம்மாம் – ஷார்ஜா, டோஹா – ஷார்ஜா, ஷார்ஜா – குவைத், ஷார்ஜா – டம்மாம் போன்ற இடங்களுக்கு இடையேயான விமானச் சேவைகள் முக்கியப் பகுதிகள் ஆகும். இந்த இடங்களுக்கு முறையே வாரத்திற்கு 21, 21, 21 மற்றும் 21 விமானங்களை இயக்குகிறது. சிறப்புத் தேவைகளுக்காக கஸானிலிருந்து ஷார்ஜாவிற்கும், ஷார்ஜாவிலிருந்து கஸானுக்கும் இடையே விமானப் போக்குவரத்துகள் செயல்படுத்தப்படுகிறது.[5]

விப‌த்துக‌ள் ம‌ற்றும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள்

  • மே 2006 அரேபியா விமான‌த்திற்கு குத்தகையிட‌ப்ப‌ட்ட‌ விமான‌ம் பிர‌ஸ்ஸ‌ல்ஸ் விமான‌நிலைய‌த்திலுள்ள‌ விமான‌க்கூடார‌த்தில் தீப்ப‌ற்றிய‌து.
  • ஏப்ர‌ல் 2010இல் ச‌ர‌க்க‌றையில் தீ ஏற்ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் இத‌ன் விமான‌ம் ஒன்று க‌ராச்சி விமான‌நிலைய‌த்தில் அவ‌ச‌ர‌ தரையிற‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.