From Wikipedia, the free encyclopedia
ஏனோக்கு (Enoch, எபிரேய மொழி:חֲנוֹךְ; அரபு மொழி: إدريس ʼIdrīs) என்பவர் விவிலியத்தின் படி, நோவாவின் தந்தையான மெத்துசேலாவின் தந்தை. இவர் ஆதாமுக்குப் பின், சேத்து வழிவந்த ஏழாம் தலைமுறையை சேர்ந்தவர்.[1] இவரின் தந்தை எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, இவர் பிறந்ததாக விவிலியம் கூறுகின்றது. ஏனோக்கு என்ற பெயருக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.
ஏனோக்கு Enoch, the Patriarch | |
---|---|
செனசிசு 5:24: "கடவுள் ஏனோக்கை எடுத்துக்கொண்டார்." (1728) | |
புனித முன்னோர், Antediluvian Patriarch, தீர்க்கதரிசி | |
ஏற்கும் சபை/சமயங்கள் | ஆர்மீனிய அப்போஸ்தலத் திருச்சபை ஆர்மீனியக் கத்தோலிக்கத் திருச்சபை இசுலாம் |
திருவிழா | சூலை 30 |
பெற்றோர் | ஜரெட் |
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவரைப்பற்றிக் குறிக்கையில், "ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.[2] [3] மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)
விவிலியத்தில் இவரைப்பற்றி மிகக் குறுகிய வசனமே காணப்பட்டாலும், பல பழைய ஏற்பாடு ஆர்வளர்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.