ஏசா
எபிரேய வேதாகம நபரான ஈசாக்கின் மூத்த மகன் / From Wikipedia, the free encyclopedia
ஏசா (ஆங்கிலத்தில் :Esau[lower-alpha 1]) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார். மற்றோருவர் இசுரயேலர்களின் பன்னிரண்டுக் கோத்திரங்களின் தகப்பன் என அழைக்கப்படும் யாக்கோபு, ஏசாவின் தம்பி ஆவார். மேலும் இவருக்கு ஏதோம் என்னும் மறுபெயரும் உள்ளது.[3] இவரைப் பற்றிய தகவல் ஆதியாகமம்[4] மற்றும் இறைவாக்கினர்களான ஒபதியா [5]மற்றும் மலாக்கி ஆகியோரால் முன்னுரைக்கிறார்கள். [6]கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் உரோமையருக்கு எழுதிய திருமுகம் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளது.[7]
விரைவான உண்மைகள் ஏசாEsau, பிறப்பு ...
ஏசா Esau | |
---|---|
யாக்கோபு தம் சகோதரர் ஏசாவுடன் சமாதானம் செய்துகொள்கிறது போன்றக் கற்பனை ஓவியம். (தொநூ 33). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (ஆண்டு 1577-1640). காப்பிடம்: இசுக்காட்லாந்து. | |
பிறப்பு | கானான் |
இறப்பு | இஸ்ரேல் |
பெற்றோர் | ஈசாக் (தந்தை) ரெபேக்கா (தாய்) |
வாழ்க்கைத் துணை | ஆதா அகோலிபாமா பசுமாத்து |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | யாக்கோபு (தம்பி) ஆபிரகாம் (தாத்தா) சாராள் (பாட்டி) லாபன் (மாமா) இசுமவேல் (பெரியப்பா) யோசேப்பு (மற்றும் மற்ற 11 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள். (உடன் பிறந்தவரின் மகன்கள்) தீனா (உடன் பிறந்தவரின் மகள்) |
மூடு