![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Flag_of_Esperanto.svg/langta-640px-Flag_of_Esperanto.svg.png&w=640&q=50)
எஸ்பெராண்டோ
மொழி / From Wikipedia, the free encyclopedia
எஸ்பராண்டோ ( Esperantoⓘ)[2] உலகில் அதிகம் பேசப்படும் கட்டமைக்கப்பட்ட மொழியாகும்.[3] எஸ்பெராண்டோ என்பதன் பொருள் நம்பிக்கையுடனான என்பதாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய 'உனுவா லிப்ரோ' (Unua Libro)[4] எனும் நூலில் 'எஸ்பெராண்டோ' பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன.
Esperanto எஸ்பெராண்டோ | |
---|---|
![]() | |
உருவாக்கப்பட்டது | டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப் |
Users | தெரியவில்லை (தாய்மொழியாக: 200 - 2000 (1996, மதிப்பிடு.);[1] சரளமாக பேசும் மக்கள்: 100,000 - 2 மில்லியன் காட்டடப்பட்டது: 1887) |
நோக்கம் | constructed language
|
மூலம் | ஜெர்மானிய மொழிகள் மற்றும் ரோமானிய மொழிகளிலிருந்து சொல்லகராதி; சிலாவிய மொழிகளிலிருந்து உச்சரிப்பு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | eo |
ISO 639-2 | epo |
ISO 639-3 | epo |
கற்றலுக்கு எளியதாக மொழி இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சாமன்ஹோஃப் இம்மொழியை எஸ்பெராண்டோ எனும் புனைவுப்பெயரில் தொடங்கியுள்ளார். இன்று உலகில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுகின்றனர். மதிப்பீட்டின் படி ஒரு இலட்சம் முதல், இரண்டு மில்லியன் மக்களால் இம்மொழியை சரளமாக பேசமுடியும். தற்போது 120 நாடுகளில் இம்மொழி பேசப்படுகின்றது.[5] ஐரோப்பா, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதன் பயன்பாடு மிகுந்து உள்ளது.[6] ஆனால் உலகில் எங்கேயும் எஸ்பெராண்டோ ஆட்சி மொழியாக இல்லை.