வன்கூடு
From Wikipedia, the free encyclopedia
வன்கூடு (skeleton) (கிரேக்கம்: σκελετός, skeletós "உலர்ந்த்து"[1]) என்பது (அல்லது பொதுவழக்கில் எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), உயிரிகளின் உடலைத் தாங்குவதற்கான வலுவான, கடினத்தன்மை கொண்ட ஒரு சட்டகம் ஆகும். இது விலங்கின் உடலை நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு புறவன்கூடாகவோ, அல்லது அகவன்கூடாகவோ நீர்ம வன்கூடாகவோ உயிர்க்கலக்கூடாகவோ அமையலாம். ஆமை போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும். நிலைத்திணை (தாவர) வன்கூடுகள் இயங்குபவையாகவும் தகைவை ஏற்பவையாகவும் உள்ளன.
விரைவான உண்மைகள் வன்கூடு, விளக்கங்கள் ...
வன்கூடு | |
---|---|
சிட்னியில் உள்ள ஆத்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாந்த,குதிரை எலும்புக் கூடுகள். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
கிரேக்கம் | σκελετός |
MeSH | D012863 |
உடற்கூற்றியல் |
மூடு