![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Emma_Robert_2016_Comic_Con.jpg/640px-Emma_Robert_2016_Comic_Con.jpg&w=640&q=50)
எம்மா ராபர்ட்ஸ்
அமெரிக்க நடிகை (பிறப்பு 1991) / From Wikipedia, the free encyclopedia
எம்மா ரோஸ் ராபர்ட்ஸ் (பிறப்பு: 10 பெப்ரவரி 1991) என்பவர் அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார்.[1] இவர் இளம் கலைஞர் விருது, எம் டிவி திரைப்படம் & தொலைக்காட்சி விருது, ஷோவெஸ்ட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் எம்மா ராபர்ட்ஸ், பிறப்பு ...
எம்மா ராபர்ட்ஸ் | |
---|---|
![]() 2016 சான் டியேகோ காமிக்-கானில் ராபர்ட்ஸ் | |
பிறப்பு | எம்மா ரோஸ் ராபர்ட்ஸ் பெப்ரவரி 10, 1991 (1991-02-10) (அகவை 33) ரைன்பெக், நியூ யோர்க, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | நடிகர் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 முதல் தற்போது வரை |
பெற்றோர் |
|
துணைவர் | இவான் பீட்டர்ஸ் (2012–2019) காரெட் ஹெட்லண்டின் (2019–2022) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் |
|
மூடு
2001இல் ப்ளோ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக அறிமுகமானார். பிறகு நிக்கலோடியன் தொலைக்காட்சியில் வெளியான அன்ஃபேபுலஸ் என்ற நாடகத்தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்டார். 2013 முதல் வெளியாகும் அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மற்றும் 2015-16இல் வெளியான ஸ்க்ரீம் க்வீன்ஸ் தொடர்களால் மேலும் புகழடைந்தார்.[2]