![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/MESCE_Kuttippuram.jpg/640px-MESCE_Kuttippuram.jpg&w=640&q=50)
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி
கேரளத்தில் உள்ள பொறியியில் கல்லூரி / From Wikipedia, the free encyclopedia
எம்.இ.எஸ். பொறியியல் கல்லூரி (MES College of Engineering) என்பது கேரளத்தின் மலப்புறத்தின் குட்டிப்புரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியாகும். இது கேரளத்தின் முதல் சுயநிதி பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகமானது பாரதப்புழா ஆற்றங்கரையில் ஒரு மைலுக்கும் (1.6 கி.மீ.) மேலாக விரிந்திருக்கின்றது. இது சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக 1994 இல் நிறுவப்பட்டது.
![]() | |
Other nameகள் | MESCE |
---|---|
வகை | கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் |
உருவாக்கம் | 1994; 30 ஆண்டுகளுக்கு முன்னர் (1994) |
முதல்வர் | முனைவர். இரகமத்துனிசா |
அமைவிடம் | , , இந்தியா 10.8302°N 76.0234°E / 10.8302; 76.0234 |
வளாகம் | 6 கட்டடங்கள், 1,000 m2 (11,000 sq ft) |
இணையதளம் | www |
இந்தக் கல்லூரியில் அனைத்துப் பின்னணியில் இருந்தும் மாணவர்கள் சேர்கின்றனர். கல்வியில் ஏழ்மையான சமூகங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. உருவாக்க செயல் கூடம், எம்.இ.எஸ் புதுப்புனைவு மையம், சமூக மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வளாகத்திற்கு வெளியே உள்ள முக்கிய வசதிகள் ஆகும். கல்லூரி தற்போது இளநிலை கட்டடக்கலை உட்பட எட்டு இளநிலை பாடத் திட்டங்களை வழங்குகிறது, அத்துடன் முதுநிலை பொறியியலில், முதுகலை கணினி பயன்பாடுகள், முதுகலை வணிக நிர்வாகம் மற்றும் முதுகலை கட்டிடக்கலை ஆகியவற்றில் பத்து முதுநிலை பாடத் திட்டங்களை வழங்குகிறது.