எப்டாசார்ட்டோரைட்டு (Heptasartorite) என்பது Tl7Pb22As55S108 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய வகைக் கனிமமான[2] இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது[1]. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிமங்களான என்னியசார்ட்டோரைட்டு மற்றும் என்டெகாசார்ட்டோரைட்டுடன் எப்டாசார்ட்டோரைட்டு தொடர்பு கொண்ட கனிமமாக விளங்குகிறது[3][4]. இம்மூன்று கனிமங்களுமே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லெங்கென்பேச்சு கல் சுரங்கத்திலிருந்து கிடைக்கின்றன. இச்சுரங்கத்தில் தாலியம் கனிமங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன[5]. ஈடனார்டெரைட்டு கனிமமும் அட்சின்சோனைட்டு கனிமமும் எப்டாசார்ட்டோரைட்டின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கின்றன[6][7].

விரைவான உண்மைகள் எப்டாசார்ட்டோரைட்டுHeptasartorite, பொதுவானாவை ...
எப்டாசார்ட்டோரைட்டுHeptasartorite
பொதுவானாவை
வகைசல்போவுப்பு
வேதி வாய்பாடுTl7Pb22As55S108
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]
மூடு

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எப்டாசார்ட்டோரைட்டு கனிமத்தை Hsat[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.