எபிரேயர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை எபிரேயர் மக்கள் பற்றியது. விவிலிய நூலுக்கு, எபிரேயருக்கு எழுதிய திருமுகம் என்பதைப் பாருங்கள்.
எபிரேயர் (Hebrews; எபிரேயம்: עברים or עבריים, திபோரியம்: ʿIḇrîm, ʿIḇriyyîm; தற்கால எபிரேயம் ʿIvrim, ʿIvriyyim; [ISO 259-3] ʕibrim, ʕibriyim) என்பது [1][2][3] டனாக்கில் (எபிரேய விவிலியம்) 32 வசனங்களில் 34 தடவைகள் காணப்படும் சொல் ஆகும். இச் சொல் ஒர் இனப்பெயர் அல்ல,[4][5] மாறாக ஒரு செமிட்டிய இசுரயேலர் என்பதனுடன் ஒத்த கருத்துள்ள சொல்லாக அதிகம் கையாளப்படுவதுடன், குறிப்பான முன்-முடியாட்சிக் காலத்தில் நாடோடிகளான இருந்தபோது பயன்படுத்தப்பட்டதாயினும், சில சந்தர்ப்பங்களில் இது பரந்த விதத்தில், போனீசிய மக்கள் அல்லது வெண்கலக்கால வீழ்ச்சி காலத்தில் அறியப்பட்ட சாசு குழுக்கள் போன்ற பிற புராதன மக்கள் குழுக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[6]