என்புருக்கி நோய்
குழந்தைகளின் மெண்மையான எலும்புகளில் எற்படும் ஒரு நோய் / From Wikipedia, the free encyclopedia
என்புமெலிவு நோய் (Rickets) என்பது குழந்தைகளில் ஏற்படும் எலும்பு நலிவு அல்லது மெலிவு நோய் ஆகும். இந்நோய் உணவுக் குறைபாடுகளாலோ மரபியற் சிக்கல்களாலோ உருவாகிறது.[2] அறிகுறிகளாக, வளைந்த அல்லது திருகிய கால்கள், மட்டான வளர்ச்சி, என்புவலி, பெரிய நெற்றி, உறக்க இடர் வாகியன் அமையும்.[2][3] சிக்கல்களாக, எலும்க் குலைவுகள், எலும்பு நசிவுகள், தசைச் சுழி(ரி)ப்பு, அல்லது மீக்கூனல் முதுகெலும்பு ஆகியன அமையும்.[2][3]
என்புமெலிவு நோய், Rickets | |
---|---|
தாழ் எலும்படர்த்தியும் வளைந்த தொடையெலும்பும் அமைந்த என்புருக்கியுள்ள இரண்டு அகவைக் குழந்தையின் X-கதிர்ப்படம் | |
பலுக்கல் | |
சிறப்பு | குழந்தை மருத்துவ இயல், முடக்குவாதவியல், உணவூட்டவியல் |
அறிகுறிகள் | வளைந்த கால்கள், மட்டான வளர்ச்சி, என்புவலி, பெரிய நெற்றி, உறக்க இடர்[1][2][3] |
சிக்கல்கள் | எலும்பு நசிவுகள், தசைச் சுழிப்பு, மீக்கூனல் முதுகெலும்பு, அறிதிற ஊனம்[3] |
வழமையான தொடக்கம் | குழந்தைப்பருவம்[3] |
காரணங்கள் | போதுமான உயிர்ச்சத்து டி அல்லது கால்சியம் இல்லாத உணவு , மிகக் குறைந்த சூரிய ஒளி ஆட்பாடு, மிகைநிரப்பு உணவின்றி முலைப்பால் மட்டும் அருந்தல், வயிற்று நோய், சில மரபியற் சிக்கல்கள்[2][3][4] |
நோயறிதல் | குருதி ஓர்வுகள், X-கதிர்ப்படங்கள்[2] |
ஒத்த நிலைமைகள் | பங்கோனி நோய்த்தொகை, உயிர்ச்சத்து சி குறை நோய், உலோவே நோய்த்தொகை, எலும்புநலிவு[3] |
தடுப்பு | முலைப்பால் மட்டும் அருந்தும் குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து டி நிரன்புணவுகள் தரல்[5] |
சிகிச்சை | உயிர்ச்சத்து டி கால்சியம் தரல்[2] |
நிகழும் வீதம் | ஓரளவு பரவலாக (நடுவண் கிழக்குப் பகுதி, ஆப்பிரிக்கா,ஆசியா)[4] |
என்புமெலிவு நோய் Rickets | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E55. |
ஐ.சி.டி.-9 | 268 |
நோய்களின் தரவுத்தளம் | 9351 |
மெரிசின்பிளசு | 000344 |
ஈமெடிசின் | ped/2014 |
பேசியண்ட் ஐ.இ | என்புருக்கி நோய் |
ம.பா.த | D012279 |
என்புருக்கி நோயின் மிகப்பொதுவான காரணமாக உயிர்ச்சத்து டி அமைந்தாலும் நோயை உருவாக்கும் மரபுப்பேறு வழியான மரபியல் வடிவங்களும் நிலவுவதுண்டு.[2] இது உயிர்ச்சத்து டி குறைந்த உணவை உண்பதாலும் சூரிய ஒளிபடாத கருப்புத் தோலாலும் டி உயிர்ச்சத்து மிகைநிரப்பின்றி முலைப்பால் அருந்துவதாலும் சில மரபியல் நிலைமைகளாலும் வயிற்று வலியாலும் ஏற்படுகிறது.[2][3] உணவில் போதுமான கால்சியமும் பாசுவரமும் இல்லாமையும் கூட நோயைத் தரும்.[4][5] வளர்ச்சித் தட்டுகளின் காலியப் போதாமை இயங்கமைப்பும் கூட நோயை உருவாக்கலாம்.[6] கால்சியக்குறைவையும் பாசுவரக்குறைவையும் பாசுவரநொதி உயர்வையும் கண்டறியும் குருதி ஓர்வுகளாலும் X-கதிர்ப்படங்களாலும் நோயறியப்படுகிறது.[2]
நோயைத் தவிர்க்க, முலைப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து டி மிகைநிரப்பிகள் தரப்படுகின்றன.[5] Otherwise, treatment depends on the underlying cause.[2] நோய உயிர்ச்சத்து டியால் ஏற்பட்டால், உயிர்ச்சத்து டியும் கால்சியமும் தரப்படுகின்றன.[2] இந்நிலையில் சில வாரங்களில் நோய் தணிந்து மேம்படுதலைக் காணலாம்.[2] இயல்பாக எலும்புக் குலைவுகள் காலத்தால் சீரடையலாம்.[5] சிலவேளைகளில் எலும்புக் குலைவைச் சரிசெய்ய அறுவை முறை கையாளப்படுவதுண்டு.[7][3] Genetic forms of the disease typically require specialized treatment.[5]
நடுவண் கிழக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் என்புருக்கி நோய் ஓரளவு பரவலாக நிலவுகிறது.[4] சில சிறுபான்மைக் குழுக்களைத்தவிர, ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்நோய் பேரள்வில் நிலவுவதில்லை.[3][4] இது 3 முதல் 8 அகவை உள்ள சிறுவர்களுக்கே வருகிறது.[3][4] நோயின் வீதம் ஆண்களிலும் பெண்களிலும் சமமாகவே நிலவுகிறது.[3] இந்நோயின் தாக்கம் கிபி முதல் நுற்றாண்டில் இருந்துவருவதாக அறியப்பட்டுள்ளது;[8] இது உரோமப் பேரரசில் மிகப்பரவலாக நிலவியுள்ளது.[9] இது 20 ஆம் நூற்றாண்டில் பரவலாக அமைகிறது.[8] தொடக்கநிலையில் இதற்கு காடுலிவர் எண்ணெய்யால் மருத்துவம் செய்யப்பட்டது.[8]