எசுன்னா
From Wikipedia, the free encyclopedia
எசுன்னா (Eshnunna) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியங்களில் ஒன்றாகும். எசுன்னா இராச்சியம் கிமு 3000 முதல் கிமு 1763 முடிய புகழுடன் விளங்கியது.[1]
விரைவான உண்மைகள் எசுன்னா இராச்சியம், தலைநகரம் ...
எசுன்னா இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஏறத்தாழ கிமு 3000–கிமு 1700 | |||||||||
தலைநகரம் | எசுன்னா | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
• கிமு 2000 | அர்குதின்னா (முதல்) | ||||||||
• கிமு 1763 | சில்லி-சின் (இறுதி) | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | ஏறத்தாழ கிமு 3000 | ||||||||
• முடிவு | கிமு 1700 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ஈராக் |
மூடு
தற்போது எசுன்னா இராச்சியத்தின் தொல்லியல் களம், ஈராக் நாட்டின் தியாலா ஆளுநரகத்தில், டைகிரிஸ் ஆற்றுக்கும், சக்ரோசு மலைத்தொடருக்கு இடையே, டெல் அஸ்மர் எனும் பெயரில் சிறு ஊராக உள்ளது. மேலும் எசுன்னா எனும் டெல் அஸ்மர் எனும் தொல்லியல் நகரம், பாக்தாத் நகரத்திற்கு வடகிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]